‘புத்தம் புது காலை’,’இளைய நிலா பொழிகிறதே’ – புல்லாங் குழல் இன்னிசையால் மாயம் செய்த சுதாகர் மறைவு.

0
410
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். மேலும், இவரின் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் எல்லோரையும் கட்டிபோட்டவர். ஆனால் இவரின் பாடல்களுக்கு முக்கியமான தூண்களாக இருந்தது அவருடன் பணியாற்றிய திறமை வாய்ந்த இசைக்கலைஞர்கள் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

-விளம்பரம்-

அந்த வகையில் இளையராஜா பல இசை கலைஞர்களை சினிமா துறைக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்த புல்லாங்குழல் இசைக்கலைஞர் சுதாகர் என்பவரை சொல்லலாம். இவர் இளையராஜாவின் தொடக்க கால படங்களில் இருந்து பல காலம் பணியாற்றி வந்தார். கடந்த 1977ஆம் ஆண்டு வெளியான “கவிக்குயில்” என்ற படத்தில் இருந்தே இவர் இளையராஜாவுடன் இருந்து வந்தார்.

- Advertisement -

ஹிட் பாடல்களில் பணியாற்றிய சுதாகர் :

கவிக்குயில் என்ற அந்த படத்தில் வரும் “சின்னக்கண்ணன் அழைக்கிறான்” என்ற சூப்பர் ஹிட் பாடலுக்கு இவர்தான் புல்லங்குழலில் இசையமைத்து கொடுத்தார். அதற்கு பிறகு பயணங்கள் முடிவதில்லை, மூன்றாம் பிறை படத்தில் கண்ணே கலைமானே,பனிவிழும் மலர்வணம், புத்தம் புது காலை, அழகிய கண்ணே இளைய நிலா பொழிகிறதே ஆகிய பாடல்களில் தனது புல்லாங் குழல் இன்னிசையால் மாயம் செய்திருப்பார் சுதாகர்.

ஆனால் அந்த காலத்தில் குணசிங், நஞ்சப்ப என பல திறமை வாய்ந்த பிரபலமான புல்லாங்குழல் இசைக்கலைஞர்கள் இருந்த போதும் தன்னுடைய அபாரமான இசையினால் தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்து வைத்திருந்தார். மேலும் பத்ரகாளி என்ற படத்தின் மூலம் இசைஞானி இளயராஜாவுடன் கைகோர்த்த சுதாகர் அதற்கு பிறகு சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல் இளைய ராஜாவின் ” நத்திங் பட் விண்ட்” ஆல்பத்திற்கும் புல்லாங்குழல் இவர் தான் வாசித்தார்.

-விளம்பரம்-

சுதாகர் மறைவு :

இப்படி ஒரு திறமையான ஒரு இசைக்கலைஞர் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமாக்கினார். இவரின் மறைவுக்கு பலர் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இவரை பற்றி கிடார் இசைக்கலைஞர் சுதா மாஸ்டர் கூறுகையில் “சுதாகரின் நினைவாற்றல் மிகவும் அபாரமானது எந்த பாடலாக இருந்தாலும் நோட்ஸ் இல்லாமல் அப்படியே வாசிப்பார். அதோடு அவர் இருக்கும் இடம் எப்போது கலகலப்பாக இருக்கும். அப்படிப்பட்ட சுதாகர் அவர்களின் மறைவு தனக்கு மிகவும் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.

Advertisement