80 வயதில் திருக்கடையூர் கோவிலில் சதாபிஷேகம் செய்துகொண்ட இளையராஜா – அதுக்கு பலன் இது தானாம்.

0
347
- Advertisement -

இசைஞானி இளையராஜாவுக்கு ஆயுள் விருத்தி ஹோமம் பூஜை நடைபெற்றிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். இவருடைய இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் எல்லோரையும் கட்டிபோட்டவர். 1976 ஆம் ஆண்டு இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-
இளையராஜா எத்தனை பாடலை திருடியுள்ளார் தெரியுமா.! அவரது குடும்பத்தாரே சொன்ன  விவரம்.! - Tamil Behind Talkies

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். இவர் இசையமைப்பாளர், பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இவர் பாடல் வரிகளை எழுதுபவர் என்று பலருக்கும் தெரியாத ஒன்று. மேலும், இவர் கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர்.

- Advertisement -

இளையராஜா வாங்கிய விருது:

இதனால் இவருக்கு இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இவர் நான்கு முறை இவர் பெற்று இருக்கிறார். மேலும், இவர் சில வருடங்களாகவே இசைக்கச்சேரிகள் நடத்துவதில் அதிக ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் கூட இவர் சென்னையில் இசை கச்சேரி நடத்தி இருந்தார்.

இளையராஜா சர்ச்சை பேச்சு:

இதில் தனுஷ் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தகக்து. பின் இவர் சமீபத்தில் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியாகி இருந்தது. இந்த புத்தகத்திற்கு முன்னுரையை இளையராஜா எழுதி இருந்தார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா மோடியும், அம்பேத்காரையும் ஒப்பிட்டு பேசி இருந்தார். இளையராஜாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த ஒப்பீட்டுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து இருந்தது.

-விளம்பரம்-

ஆயுள் விருத்தி ஹோமம் பூஜை :

இருந்தாலும் இளையராஜா தன் இசை பணியை செய்து கொண்டு வருகிறார். சமீபத்தில் வெளிவந்த அக்கா குருவி படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில் இசைஞானி இளையராஜாவிற்கு ஆயுள் விருத்தி ஹோமம் பூஜை நடைபெற்றிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூர் என்ற பகுதியில் அபிராமி அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. தர்மபுரி ஆதினத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் தான் மார்க்கண்டேயனுக்காக எமனை காலசம்ஹார மூர்த்தி வதம் செய்த வரலாறு உண்டு.

இளையராஜா செய்த பூஜை:

இதனை அடுத்து இந்த கோவிலில் பல பிரபலங்கள் ஆயுள் விருத்தி பூஜை செய்வது வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் 80 வயதான இசைஞானி இளையராஜாவுக்கு திருக்கடையூர் கோவிலில் ஆயுள் ஹோம விருத்தி பூஜை இன்று நடைபெற்றது. இதற்காக இந்த கோவிலுக்கு வந்த இளையராஜாவை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். மங்கள வாத்தியம் இசைக்க இளையராஜாவுக்கு ஆயுள்விருத்தி பூஜையும் நடந்தது. இந்த பூஜையில் இளையராஜாவின் மகன், மகள், சகோதரர் கங்கை அமரன், இயக்குனர் பாரதிராஜா உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். அதற்கான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement