பவதாரணியின் கடைசி ஆசை குறித்து இளையராஜா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இவர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் இசையமைத்து உள்ளார். இவருடைய இசை திறமைக்கு பல விருதுகளை வாங்கி உள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் இளையராஜா அவர்கள் நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் முறையாக பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமா உலகில் இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் என பல முகங்களைக் கொண்டவர். மேலும், இசைஞானி இளையராஜாவின் மகள் தான் பவதாரணி. இவர் மைடியர் குட்டி சாத்தான் என்ற படத்தின் மூலம் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன் பின் இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருந்தார்.
பவதாரணி குறித்த தகவல்:
இவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்கு தேசிய விருது கூட வாங்கி இருந்தார்.
பெரும்பாலும் இவர் தன்னுடைய தந்தை, சகோதரர்கள் இசையில் தான் பாடி இருந்தார். இதனிடையே இவர் சபரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் பவதாரணிக்கு புற்றுநோய் இருந்தது. இதற்காக இவர் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து இருந்தார். கிட்டத்தட்ட கடந்த ஐந்து மாதங்களாக அவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டு வந்து இருந்தார்.
பவதாரணி மறைவு:
அதேபோல் இளையராஜாவும் இலங்கையில் தான் இருந்திருந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டு பவதாரணி உயிரிழந்திருந்தார். இவருடைய இறப்பு சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இளையராஜா குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். மேலும், பவதாரணி மறைந்து ஓராண்டு ஆகிருக்கும் நிலையில் இளையராஜா அறிவிப்பு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
பவதாரணி நினைவு நாள்:
அதாவது, பவதாரணி நினைவாக அவர் பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கி இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்திருந்தார். பவதாரணியின் நினைவு நாள் கூட நடைபெற்று இருந்தது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினர் கலந்துகொண்டு இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் பவதாரணி பாடிய பாடல்களின் கச்சேரியும் நடத்தப்பட்டது.
இளையராஜா சொன்ன விஷயம்:
அதற்கு பின் விழாவில் இளையராஜா, இது பவதாரணி பாப்பாவினுடைய பிறந்தநாள். இந்த பிறந்த நாளிலேயே அவரின் நிதி நாளும் அமைந்திருக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தி அடைகிறது என்பதற்கான நல்ல உதாரணம் தான் இது. சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழுவை உருவாக்க வேண்டும் என்பது பவதாரணி உடைய கடைசி ஆசை. 15 வயதிற்கு மேற்படாதவர்களுக்கு மட்டுமே இந்த ஆர்கெஸ்ட்ரா. உலகின் எந்த மூலையில் இருந்து சிறுமிகள் வந்தாலும் இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவில் சேரலாம். இந்த குழுவில் சேர விரும்புவார்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். இது பவதாரணி உடைய நினைவாக உலகம் முழுவதும் பரவும் என்று கூறியிருக்கிறார்.