உங்க எல்லாரையும் கோபப்படுத்துறேன், ஒரு மாதிரி நடத்துறேன் என்பதெல்லாம் எனக்கு தெரியுது. ஆனாலும் – இளையராஜாவா இப்படி பேசுறது.

0
3020
Ilayaraja
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி இவர் இசையை விரும்பாத ரசிகர்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.மேலும், 80ஸ் காலகட்டத்தில் ஹீரோ ஹீரோயினை புக் செய்யும் முன்பாக இளையராஜாவை தான் முதலில் இயக்குனர்கள் புக் செய்வார்கள். அதற்கு காரணம் இவர் இசையமைத்தால் அந்த படம் நிச்சயம் ஹிட் என்று நம்பினார்கள். இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது.

-விளம்பரம்-
https://twitter.com/Meenavan_Iyar/status/1135285514922315776

என்னதான் இசையில் ஜாம்பவான் என்றாலும் பொது வாழ்வு என்று வந்துவிட்டால் இளையராஜா ஒரு டெரர் பீஸ் தான். இதுவரை பல்வேறு முறை பல விதமாக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இளையராஜா. அதிலும் சமூக வலைத்தளம் வந்த காலம் முதல் இவர் அடிக்கடி ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். இவரது தலைக்கனமான பேச்சுக்கள் பல முறை ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது.

- Advertisement -

எஸ் பி பி தனது பாடல்களை பாடக் கூடாது என்று இவர் சொன்னதில் இருந்தே இவரை சமுக வலைதளத்தில் நோட் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஒரு மேடையில் தண்ணீர் கொண்டு வந்த செக்குரிட்டியை திட்டி தீர்த்தார் அப்போது அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும் அவரை வசைபாடினார். அதோடு மட்டும் நிற்காமல் என் இசையால் தான் நீங்கள் எல்லாம் வாழ்கிறீர்கள் என்று ரசிகர்களை பார்த்து சொன்னார்.

https://twitter.com/vipana7/status/1400140889222045700

இன்னொரு மேடையில் ஷங்கர் மற்றும் இளையராஜா மேடையில் இருந்த போது தொகுப்பாளினியாக இருந்த ரோகினி நீங்கள் இருவரும் எப்போது ஒன்றாக படத்தில் பணியாற்றப் போகிறீர்கள் என்று எதார்த்தமாக கேட்க உடனே டென்சன் ஆன இளையராஜா ‘நீ என்ன எனக்கு சான்ஸ் வாங்கி கொடுக்கிறியா’ என்று கடுமையாக பேசி இருந்தார். அதே போல பார்த்திபனை கூட ஒரு மேடையில் உனக்கு மியூசிக்கை பற்றி என்ன தெரியும் என்று கேட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதற்க்கு எல்லாம் மேலாக சமீபத்தில் மறைந்த மனோபாலாவின் இறப்பிற்கு இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் இளையராஜா. அதில் என்னை பார்ப்பதற்காக நான் வீட்டிலிருந்து கிளம்பிய உடனே கோடம்பாக்கம் பக்கத்தில் காத்திருந்த எத்தனையோ இயக்குனர்களின் மனோபாலாவும் ஒருவர். பின் நாட்களில் நடிகரானாலும், படங்களை இயக்கினாலும் என்னிடம் வந்து அப்போது அப்போது நடக்கும் விஷயங்களை சொல்லி விடுவார்’ என்று கூறி இருந்தார்.

இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலர் ‘ இது இரங்கல் பதிவு போல தெரியவில்லை, உங்களின் பெருமையை சொல்லும் பதிவு போல தெரிகிறது என்று விமர்சித்தனர். இப்படி இளையராஜா குறித்து பல சர்ச்சைகள். இதையெல்லாம் அவர் தெரிந்து தான் செய்கிறாரா இல்லை தெரியாமல் செய்கிறாரா என்று சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இதற்கு அவரே விளக்கமளித்துள்ளார்.

அதில் ‘ எனக்கு தெரிகிறது உங்களை டார்ச்சர் செய்கிறேன், உங்களை கோபப்படுத்துகிறேன், எல்லாரையும் ஒரு மாதிரியாக நடத்துகிறேன் என்பதையெல்லாம் எனக்கு தெரிகிறது. ஆனாலும் அதை நிறுத்த முடியவில்லை’ என்று பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement