‘பாடுவேன் உனக்காகவே’ – பிரதமர் மோடி ஆதரவு கருத்துக்கு பின் இளையராஜாவின் முதல் ட்வீட்

0
204
modi
- Advertisement -

சமீபத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த புத்தகத்திற்கு முன்னுரையை இளையராஜா தான் எழுதி இருந்தார். மேலும், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா கூறியிருப்பது, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேறிக் கொண்டு இருப்பதாக இருக்கிறது. சமூகநீதி விஷயத்திலும் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-413.jpg

தற்போது இதனை அம்பேத்கார் கண்டால் பெருமைப்படுவார். அம்பேத்கர் மற்றும் மோடி ஆகிய இருவருமே ஏழ்மையின் ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் என்பதால் அந்த ஏழ்மையை ஒழிக்க பாடுபட்டவர்கள். இந்தியாவின் மீது மிகப்பெரிய கனவு கண்டு அதன் செயல்பாடுகளை செய்து வருபவர் மோடி என்று இளையராஜா மோடி குறித்து புகழ்ந்து பேசி இருந்தார். இளையராஜாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறியது:

மேலும், இந்த ஒப்பீட்டுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பிலிருந்தும் இளையராஜாவுக்கு கண்டனங்கள் எழுந்தன. இளையராஜாவை கண்டித்து பலரும் இளையராஜாவுக்கு பாஜக அரசிடமிருந்து என்ன நெருக்கடியோ? இப்படி பாராட்டி இருக்கிறார் என்றும் கருத்து வெளியிட்டுள்ளனர். நெட்டிசன்கள் சொல்லியது போல் இளையராஜாவுக்கு அரசிடமிருந்து கடுமையான நெருக்கடி ஒன்று கடந்த சில மாதங்களில் ஏற்பட்டு இருக்கிறது.

This image has an empty alt attribute; its file name is 1-414.jpg

இளையராஜாவுக்கு அனுப்பப்பட்ட சம்மன்:

அது என்னவென்றால், ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி அதிகாரிகள் வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல் படி மோடி பற்றி இளையராஜாவின் புகழ்ச்சிக்கு பின்னணி இதுவாக தான் இருக்கும் என்று விமர்சனங்கள் எழுந்தது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வு துறை தலைமை இயக்குநர் சென்னை மண்டல அலுவலகம் கிரீம்ஸ் ரோட்டில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு சீனியர் இன்டலிஜன்ஸ் ஆபீசர், பிப்ரவரி 28 ஆம் தேதி இளையராஜாவின் முகவரிக்கு இளையராஜாவின் பெயர் குறிப்பிட்டு ஒரு சம்மன் அனுப்பி இருக்கிறார்.

-விளம்பரம்-

சம்மன் தான் காரணமா :

ஆனால், இளையராஜ போகவில்லை. பின்னர் மீண்டும் ஜிஎஸ்டி புலனாய்வு துறையில் இருந்து மார்ச் 21 ஆம் தேதி மீண்டும் இளையராஜாவுக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதே காரணங்களை குறிப்பிட்டு மார்ச் 28ஆம் தேதி காலை தேசிய புலனாய்வு துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று இளையராஜாவுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

விமர்சனத்திற்கு உள்ளான ராஜா :

ஆனால், ஏப்ரல் 14ஆம் தேதி பிரதமர் மோடியை பற்றி தொடர்ந்து புத்தகங்கள் வெளியிட்டு வரும் ப்ளூ கிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனத்தில் அம்பேத்கர் அண்ட் மோடி என்ற புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருக்கிறார். ஆகையால் மோடியை இளையராஜா புகழ்வதற்கு இந்த சம்பவம் தான் காரணமாக இருக்குமோ? என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இளையராஜா ட்வீட் ஒன்றை தற்போது பதிவிட்டுள்ளார்.

சர்ச்சைகளுக்கு பின் ராஜாவின் முதல் பதிவு :

அதில் ரஜினி நடித்த தளபதி படத்திலிருந்து சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற பாடலின், “நான் உன்னை நீங்க மாட்டேன், நீங்கிானல் தூங்க மாட்டேன். பாடுவேன் உனக்காகவே“ என்ற வரிகளை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த ட்வீட்க்கும் கலவையான கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement