சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து இசைஞானி இளையராஜா பேசியிருக்கும் பின்னணிக்கான காரணம் தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய சினிமா உலகில் இசையில் ஜாம்பவானாக திகழ்பவர் இளையராஜா. இவருடைய இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் எல்லோரையும் கட்டிபோட்டவர். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இதனால் இவருக்கு பல விருதுகள் கிடைத்து உள்ளது.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த புத்தகத்திற்கு முன்னுரையை இளையராஜா தான் எழுதி இருந்தார். மேலும், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா கூறியிருப்பது, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேறிக் கொண்டு இருப்பதாக இருக்கிறது. சமூகநீதி விஷயத்திலும் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறியது:
தற்போது இதனை அம்பேத்கார் கண்டால் பெருமைப்படுவார். அம்பேத்கர் மற்றும் மோடி ஆகிய இருவருமே ஏழ்மையின் ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் என்பதால் அந்த ஏழ்மையை ஒழிக்க பாடுபட்டவர்கள். இந்தியாவின் மீது மிகப்பெரிய கனவு கண்டு அதன் செயல்பாடுகளை செய்து வருபவர் மோடி என்று இளையராஜா மோடி குறித்து புகழ்ந்து பேசி இருந்தார். இளையராஜாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த ஒப்பீட்டுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பிலிருந்தும் இளையராஜாவுக்கு கண்டனங்கள் எழுந்தன. இளையராஜாவை கண்டித்து பலரும் இளையராஜாவுக்கு பாஜக அரசிடமிருந்து என்ன நெருக்கடியோ?
இளையராஜாவுக்கு அனுப்பப்பட்ட சம்மன்:
இப்படி பாராட்டி இருக்கிறார் என்றும் கருத்து வெளியிட்டுள்ளனர். நெட்டிசன்கள் சொல்லியது போல் இளையராஜாவுக்கு அரசிடமிருந்து கடுமையான நெருக்கடி ஒன்று கடந்த சில மாதங்களில் ஏற்பட்டு இருக்கிறது. அது என்னவென்றால், ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி அதிகாரிகள் வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல் படி மோடி பற்றி இளையராஜாவின் புகழ்ச்சிக்கு பின்னணி இதுவாக தான் இருக்கும் என்று கூறுகிறார்கள். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வு துறை தலைமை இயக்குநர் சென்னை மண்டல அலுவலகம் கிரீம்ஸ் ரோட்டில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு சீனியர் இன்டலிஜன்ஸ் ஆபீசர், பிப்ரவரி 28 ஆம் தேதி இளையராஜாவின் முகவரிக்கு இளையராஜாவின் பெயர் குறிப்பிட்டு ஒரு சம்மன் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில் கூறியிருப்பது,
இளையராஜா சம்மன் குறித்த தகவல்:
நீங்கள் உங்களுடைய சேவை வரி கட்டாத காரணத்தால் சேவை வரி புதிய தடுப்பு சட்டத்தின்படி எங்களது சென்னை மண்டல அலுவலகத்தில் நீங்கள் விசாரணைக்காக மார்ச் 10ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும். உங்களிடம் இருக்கும் ஆதாரங்களையும், ஆவணங்களையும் நீங்கள் வரும்போது எடுத்து வரவேண்டும். சென்ட்ரல் எக்சைஸ் சட்டம் 1944 பிரிவு 14, பைனான்ஸ் ஆக்ட் 1994 பிரிவு 83, ஜிஎஸ்டி சட்டம் 2017 பிரிவுகள் 70, 174 ( 2) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் நீங்கள் 2022 மார்ச் 10ஆம் தேதி காலை உங்களது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி புலனாய்வு துறை தலைமை இயக்குநர் சென்னை மண்டலத்தில் இருந்து சம்மன் அனுப்பி இருக்கிறது.
இளையராஜா, மோடியை புகழ காரணம்:
ஆனால், இளையராஜ போகவில்லை. பின்னர் மீண்டும் ஜிஎஸ்டி புலனாய்வு துறையில் இருந்து மார்ச் 21 ஆம் தேதி மீண்டும் இளையராஜாவுக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதே காரணங்களை குறிப்பிட்டு மார்ச் 28ஆம் தேதி காலை தேசிய புலனாய்வு துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று இளையராஜாவுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், ஏப்ரல் 14ஆம் தேதி பிரதமர் மோடியை பற்றி தொடர்ந்து புத்தகங்கள் வெளியிட்டு வரும் ப்ளூ கிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனத்தில் அம்பேத்கர் அண்ட் மோடி என்ற புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருக்கிறார். ஆகையால் மோடியை இளையராஜா புகழ்வதற்கு இந்த சம்பவம் தான் காரணமாக இருக்குமோ? என்று பலரும் கூறி வருகின்றனர்.