அன்று சாதியை குறிப்பிட்டதால் வழக்கு போட்ட இளையராஜா, இன்று ஏன் எதவும் சொல்லவில்லை. எழுந்த புதிய சர்ச்சை.

0
849
ilayaraja
- Advertisement -

தலித் என்று அழைத்ததற்கு ஆவேசமடைந்த இளையராஜா எழுத்தாளர் மீது வழக்கு தொடர்ந்து இருந்தார். தற்போது தலித் என்று இளையராஜா எம்பி பதவி பெற்று இருப்பதை நெட்டிசன்கள் விமர்சித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். இவரின் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் எல்லோரையும் கட்டிபோட்டவர்.

-விளம்பரம்-

1976 ஆம் ஆண்டு இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். மேலும், இவர் கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். இதனால் இவர் பல விருதுகளை பெற்று இருக்கிறார்.

- Advertisement -

இளையராஜாவுக்கு Mp சீட் :

தற்போது இவர் படங்களில் பிசியாக இருக்கிறார். இப்படி ஒரு நிரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அம்பேத்கரை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்கள் செய்து இருந்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் இளையராஜாவுக்கு Mp சீட் கிடைத்து இருக்கிறது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் தற்போது இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.

மோடி வாழ்த்து:

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சாதாரண பின்னணியில் இருந்து வந்த இளையராஜா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார். மனித உணர்வுகளை பெரிய வாயிலாக அழகுற பிரதிபலித்தவர் இளையராஜா. அவரை நாடாளுமன்ற எம்.பி.யாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலித் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தவர் இளையராஜா.

-விளம்பரம்-

பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் :

தனது பணியின்போது எண்ணிலடங்காத தடைகளையும், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் சந்தித்தவர். அனைத்து கஷ்டங்களையும் கடந்து தலைசிறந்த இசையமைப்பாளராக திகழ்கிறார் இளையராஜா என்று கூறி இருக்கிறார்கள். இப்படி இசையுலகின் ஜாம்பவானாக திகழும் இளையராஜாவை குறிப்பிட்ட சாதிக்குள் அடைத்து அதன் அடிப்படையில் எம்.பி. பதவி வழங்குவதா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் என்ற பிரபல நாடக நடிகரும், இயக்குனருமான கே.ஏ. குணசேகரன் தலித் முரசு இதழில் கடந்த 2001 ஆம் ஆண்டு இளையராஜா குறித்து கட்டுரை எழுதி இருந்தார்.

கே.ஏ. குணசேகரன் மீது வழக்கு:

அதில் அவர், தலித் இசைக்கருவிகளை திரையில் பயன்படுத்திய முன்னோடி என்று இளையராஜாவை புகழ்ந்தார். இதற்கு இளையராஜா குணசேகரன் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். அதுமட்டுமில்லாமல் குணசேகரன் எழுதிய கட்டுரைத் தொடர் புத்தகமாக வெளியிட கூடாது என்று கூறி நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி இருந்தார். இந்த நடவடிக்கை காரணமாக இளையராஜா மீது பலரும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் தன்னை தலித் என்று அடையாளப்படுத்தி வழங்கப்படும் எம்பி பதவிக்கு இளையராஜா நன்றி கூறி இருப்பதை சுட்டிக்காட்டி பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

Advertisement