தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவானான இளையராஜாவின் மகன் என்பது பலரும் அறிந்த ஒன்று தான். இளையராஜாவுக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இவர்கள் மூவருமே தன் தந்தையைப் போல இசையில் புலமை பெற்று வருகிறார்கள். இளையராஜாவின் குடும்பமே இசை குடும்பம் தான். ஆனால், இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் இசையில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா தான்.

யுவான் முதல் பட வாய்ப்பு :

திரைப்பட இயக்குனர் டி.சிவா தற்செயலாக ந யுவன் சிறுவயதில் இருக்கும்போது அவர் இசைப்பதை பார்த்திருக்கிறார் பின்பு அப்போது சிவா இயக்க உள்ள படத்தின் ஆரம்ப பகுதியில் யுவன் சங்கர் ராஜாவை இசையமைக்க சொல்லி இருக்கிறார். அதன்படி இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவின் இசையில் மயங்கிய சிவா அந்த முழு படத்தின் இசையமைக்கும் பொறுப்பை யுவன் சங்கர் ராஜாவுக்கு கொடுத்திருந்தார். பின்பு பெற்றோர்களிடம் விஷயத்தை கூறி அவர்களின் சம்மதத்துடன். அவரின் சிறு வயதிலேயே இசையமைப்பாளராகிவிட்டார் ஆம் அந்த படத்திற்கு இசையமைக்கும் போது யுவன் சங்கர் ராஜாவிற்கு 16 வயது அது என்ன படம் தெரியுமா ? நடிகர் சரத்குமார் நடிப்பில் கடந்த 1977ஆம் ஆண்டு வெளியான அரவிந்தன்.

Advertisement

தூள்ளுவதோ இளமை :

அதன்பின் சிவாவுக்கு யுவன் சங்கர் ராஜாவும் இசை பிடித்திருந்த அளவுக்கு மக்களுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அரவிந்தன் படத்தின் இசை ரசிகர்களிடம் பெரிதாக பேசபடவில்லை. அடுத்து யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த இரு படங்கள் இசையில் தோல்வியை தழுவியது. அதன் பின்பு இயக்குனர் வசந்த் அவர்கள் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் மக்களிடையே யுவன் சங்கர் ராஜாவை பற்றி பேச தொடங்கினார்கள். அதன் பிறகு இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை திரைப்படம் தான் யுவன் சங்கர் ராஜாவின் வாழ்வின் திறப்பு முணையாக மாறியது.

இளையராஜாவுக்கு பின் யுவான் தான் :

அதன் பிறகு யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்த பாலாவின் நந்தா மிகப்பெரிய வெற்றி அடைந்தது இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பூவல்லாம் கேட்டுப்பார், மௌனம் பேசியதே போன்ற படங்களில் எல்லாம் தனது முழு திறமையையும் வெளிக்காட்டி தனது இசை குடும்பத்தில் தனது தந்தை இளையராஜாவிற்கு அடுத்தபடியாக சினிமாவில் அசைக்க முடியாத அளவிற்கு வளர்ந்து இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இப்போது யுவன் சங்கர் ராஜா பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் முக்கியமான இசை அமைப்பாளராக உருவடுத்துள்ளார்.

Advertisement

மங்காத்தா :

அதோடு இதுவரை இவர் 125 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். அதே போல தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் என பல நடிகர்களின் படத்திலும் பணியாற்றியுள்ளார் யுவன். அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா படத்தில் இசை அமைத்த பின் மிகவும் பிரபலமானார் யுவான் சங்கர் ராஜா. மேலும், இன்று இவருடைய இசையை ரசிக்காத இளைஞர்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவிற்கு தன்னுடைய இசையின் மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. அதுமட்டும் இல்லாமல் இவருடைய இசைக்காகவே பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்து உள்ளது.

Advertisement

மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய இளையராஜா :

இப்படி தமிழ் சினிமாவில் தன்னுடைய பெரும் பங்கினை கொடுத்த யுவன் சங்கர் ராஜாவிற்கு இன்று பிறந்தநாள் அதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டார். அதில் ஆழியார் அணைப்பகுதி கெஸ்ட் ஹவுஸ்சில் அங்கேயே தங்கி ஒரு மூன்று நாட்கள் ஒரு நான்கு படங்களுக்கு இசையமைத்துக் கொண்டு இருந்தோம். ரஜினியின் ஜானி படத்திற்கு செனோ ரீட்டா என்ற பாடலுக்கு இசையமைத்து கொண்டிருந்த தருணம். அந்த தருணத்தில் ஊருக்கு சென்று திரும்பிய படத்தின் தயாரிப்பாளர் உங்கள் மனைவிக்கு பிரசவமாகியுள்ளது ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று தகவல் கூறினார். அப்போது பிறந்தவர்தான் யுவான் என்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் யுவன் சங்கர் ராஜா என்ன வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement