இசைஞானி இளையராஜா ஒரு கடவுள் பக்தர் என்பது நமக்கு தெரியும்.ஆனால் அதையும் தாண்டி அவர் ஒரு மிகப்பெரிய ரமணா மகரிஷியின் பக்தர். அடிக்கடி திருவண்ணாமலையில் உள்ள ராமணாஸ்ரம மடத்திற்கு அடிக்கடி விஜயம் செய்வார்.மறைந்த ரிஷி ரமனரை பற்றி பல பக்தி பாடல்களை கூட வெளியிருக்கிறார் இளையராஜா.

Advertisement

சமீபத்தில் சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.அதனை அடுத்த நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய இளையராஜா“உலகில் தோன்றிய ஞானிகளில் ரமண மகரிஷியைப் போல் எவரும் இருந்ததில்லை. இயேசு உயிர்த்தெழுந்ததாக கூறுவார்கள். ஆனால், அது நிரூபிக்கப்படவில்லை. உலகிலேயே உண்மையிலேயே உயிர்த்தெழுந்த ஒரே மகான் ரமண மகரிஷி மட்டும்தான்.

அதுவும் தனது 16 வயதில்,”என்று ஏசுவை ரமனருடம் ஒப்பிட்டு குறைத்து பேசியுள்ளார்.இதனால் இளையராஜாவின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறித்துவ அமைப்புகள் சிலர் இளையராஜாவின் வீட்டின் முன்பு போராட்டம் நடந்த முயன்ருள்ளனர் அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் தி நகர் பலம் அருகே போராட்த்தில் ஈடுபட முயன்ற 35 பேரை கைது செய்துள்ளனர்.கவிஞர் வைரமுத்துவிற்கு அடுத்து ஒரு சமூக கடவுளை பற்றி சர்ச்சியான கருத்துக்களை கூறி மாட்க்கொண்டுள்ளார் இளையராஜா.

Advertisement
Advertisement