உங்களுடன் இன்னும் பல படங்களில் நடிக்க காத்திருக்கிறேன் – வனமகன் சாயீஷா ஓபன் டாக்

0
1412

தமிழில் ஜெயம்ரவியின் வனமகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாயிஷா-சேகல். தற்போது ஆர்யாவின் கஜினிகாந்த், விஜய்சேதிபதியின் ஜூங்கா, கார்த்திக்கின் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்னர் ஹிந்தியில் ஒரே ஒரு படம் மட்டுமே நடித்துள்ளார் சாயிஷா. ஆனால்,அதற்குள்ளாக தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கிவிட்டார். இந்நிலையில் கஜினிகாந்த் பட சூட்டிங் நேற்று முடிவடைந்துள்ளது.

இதனால் காமெடி நடிகர் சதீஷ் சாயிஷாவுடன் ஒரு செல்பி எடுத்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். மேலும் “சூட்டிங்கின் கடைசி நாள் இது, வாவ், என்ன ஒரு கேரக்டர் இவங்க. உங்களை கண்டிப்பாக மிஸ் செய்வேன்” என சயிஷாவிற்கு ட்வீட் போட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த சாயிஷா, ‘நன்றி சதீஷ், உங்களுடன் இருந்த நேரம் அருமையானது. இன்னும் பல படங்களில் உங்களுடன் நடிக்க காத்திருக்கிறேன். விரைவில் பார்ப்போம்’

sathesh

என ட்வீட் போட்டிருந்தார். கஜினிகாந்த் படத்தை, ஹரஹர மகாதேவகி இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குகிறார். ஆர்யா-சாயிஷா, சதீஷ், கருணாகரன் ஆகியோர் நடிக்க இந்த படத்தினை ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கிறது.