இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா மகளாக நடித்த சுட்டி குழந்தை இந்த பிரபல காமெடி நடிகரின் மகளா..?

0
2730
nayanthara
- Advertisement -

சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான “இமைக்க நொடிகள் ” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அதர்வா, அனுரன் காஷ்யப் போன்றவர்களின் நடிப்பும் இதில் மிகவும் பாராட்டை பெற்றுவருகிறது.

-விளம்பரம்-

kottachi-wife

- Advertisement -

படத்தில் உள்ள அணைத்து கலைஞர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக நடித்துக் கொடுத்துள்ளனர். அதிலும் இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்துள்ள சிறுமியின் நடிப்பும் பார்ப்பவர்களை ரசிக்க வைத்தது.

அந்த சிறுமியின் நடிப்பை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் அந்த சிறுமி யார் என்று பார்த்தால் நம்ம காமெடி நடிகர் கொட்டாங்குச்சியின் மகள் மானஸ்வி தான். இவர் ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு அரவிந்த் சாமி, நடிகை திரிஷா நடிப்பில் வெளியான “சதுரங்கவேட்டை ” படத்தில் த்ரிஷாவிற்கு மகளாகவும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

kotachi

kotachi

சில ஆடுகளுக்கு முன்னர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த போது பேபி மானஸ்வியின் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அதன் பின்னரே மானஸ்வி, நடிகர் கொட்டாங் குச்சியின் மகள் என்று தெரியவந்தது.

Advertisement