என்னை மாதிரி முட்டாள் ஆகீடாதிங்க என்று இமான் அண்ணாச்சியின் சகோதரர் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ‘ஹே, மிஸ் பண்ணிடாதீங்க! அப்றம் வருத்தப்படுவீங்க!!’ என்ற டயலாக் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் இமான் அண்ணாச்சி. இவர் தன்னுடைய நெல்லை தமிழ் பேச்சு மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இவர் முதன் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து இவர் படங்களில் நடித்து வருகிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பரிச்சயமான முகங்களில் ஒருவராக இமான் அண்ணாச்சி இருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க, இமான் அண்ணாச்சியின் சகோதரர் செல்வகுமார். இவர் சென்னை அருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் யானை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். இந்த படத்தில் இவர் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் போனுக்கு வந்த குறுந்செய்தியால் லட்சம் ரூபாய் இழந்து உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதாவது, இமான் அண்ணாச்சி சகோதரர் செல்வகுமாருக்கு 10000 ரூபாய் கொடுப்பதாக ஒரு குறுந்செய்தி அவரது போனுக்கு வந்தது. அந்த குறுந்செய்தி வங்கி கணக்கில் கூடுதல் மதிப்பெண் இருப்பதினால் அந்த 10000 ரூபாய் கிடைக்கும் என்றும், அதற்கு இன்றே கடைசிநாள் என்றும் வந்திருக்கிறது.
இமான் அண்ணாச்சி சகோதரர் அளித்த பேட்டி:
இதனால் இவர் 10000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு லிங்கை கிளிக் செய்து தன்னுடைய வாங்கி கணக்கு விவரத்தை கொடுத்து இருக்கிறார். உடனே அவரது வங்கி கணக்கு மற்றும் அவரது மகள்கள் வங்கி கணக்கில் இருந்து திடீரென 1 லட்சத்தி 64ஆயிரம் ரூபாயை 3 தவணைகளில் மர்ம நபர்கள் திருடி இருந்தனர். இதனை அடுத்து இவர் சென்னை அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசில் வழக்கு பதிவு செய்தி இருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து இமான் அண்ணாச்சியின் சகோதரர் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பொதுவாகவே இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு இவ்வளவு பணம் வந்திருக்கு என்று மெசேஜ்ஜை நான் பெரிதாக எடுத்துக்க மாட்டேன்.
மெசேஜ் பண மோசடி:
இவ்வளவு பணம் வந்திருக்கு அவ்வளவு பணம் வந்து இருக்கு என்று வரும் எந்த மெசேஜையும் நான் பார்க்க மாட்டேன். ஆனால், இந்த மெசேஜ் மட்டும் என் கண்ணில் சரியாகப்பட்டது. அன்று மாலை 6:00 மணிக்கு போல உங்களுடைய கிரெடிட் ரிவார்டு பாயிண்ட் 9800 ரூபாய் இருக்கு. இன்னைக்கு கடைசி நாள் என்று மெசேஜ் வந்தது. இது உண்மையா? பொய்யா? என்று எனக்கு தெரியவில்லை. இது குறித்து நான் என் அண்ணன் மகனிடம் கேட்டேன். அவன் வீட்டுக்கு வந்ததும் அந்த லிங்கை கிளிக் பண்ணி பார்த்தான். பேங்க் லோகோ எல்லாம் போட்டு ஒரு பேச்சு ஓபன் ஆனது. சில பேங்க்களில் கிரெடிட் கார்டு ரிவார்ட் என்று ஒரு ஆப் இருக்கு. நாங்க லிங்க் ஓபன் பண்ணதும் அதே மாதிரியான ஒரு ஆப் இன்ஸ்டால் ஆனது.
வங்கி கணக்கு திருட்டு:
அந்த ஆப்பை ஓபன் பண்ணினால் நாம் அக்கவுண்ட் வைத்திருக்கிற அதே பேங்கோட ப்ரொபஷனல் ஆப் மாதிரி இருந்தது. அச்சு அசல் அப்படியே தான் இருந்தது. இதனால் நானும் அக்கவுண்ட் டீடைல் எல்லாம் கொடுத்து ஓபன் பண்ணினேன். கொடுத்த அடுத்த செகண்ட் நம்ம போன் கண்ட்ரோல் நம்மிடம் இல்லை. எனக்கு தப்பு நடக்குது என்று தெரிந்தது. otp கொடுக்காமலையே பணம் போகுது. இது குறித்து பேங்கிடம் கால் செய்து பேசினேன். அவர்கள் அக்கவுண்ட் பிளாக் செய்வதற்குள் 1 லட்சத்து 64 ஆயிரம் போனது. ஆனால், எனக்கு 2 லட்சத்துக்கு மேல் போனதாக மெசேஜ் வந்தது. இது குறித்து நான் தெரிந்த போலீஸிடம் பேசினேன். அவர் ஸ்கேம் நடந்து 24 மணி நேரத்திற்குள் நீங்கள் கம்ப்ளைன்ட் பண்ணனும் என்று சொல்லி 1903 என்ற எண்ணிற்கு ஃபோன் பண்ணுங்கள் என்று தகவலை சொன்னார்.
புகார் குறித்து சொன்னது:
உடனே அவர்களுக்கு கால் பண்ணி எல்லா விஷயத்தையும் சொன்னேன். அவங்க அண்ணா நகரில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் டிபார்ட்மெண்டில் கம்பளைண்ட் எழுதிக் கொடுக்க சொன்னார்கள். அங்கேயும் போய் எழுதி கொடுத்தேன். 24 மணி நேரத்தில் கம்ப்ளைன்ட் பண்ணிவிட்டேன் என்பதால் பணம் கிடைக்கும் என்று போலீசில் சொல்லுகிறார்கள். பணம் கிடைக்கும் என்று நான் கடவுளை நம்புகிறேன். இந்த மாதிரி நிறைய கேஸ் வருது என்று போலீஸ் சொன்னார்கள். நான் இந்த பேட்டி கொடுக்க காரணமே, என்னை மாதிரி யாரும் முட்டாளாக ஆகிவிடாதீங்கா என்ற நோக்கத்தில் தான். யாரும் மெசேஜை நம்பி உங்களுடைய பேங்க் டீடைல் கொடுக்காதீர்கள். அப்படியே ஏதாவது தவறு நடந்துவிட்டால் 24 மணி நேரத்திற்குள் 1903 என்கிற எண்ணுக்கு புகார் கொடுத்து விடுங்கள் என்று கூறியிருந்தார்.