‘ஹே, மிஸ் பண்ணிடாதீங்க! அப்றம் வருத்தப்படுவீங்க!!’ என்ற டயலாக் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் இமான் அண்ணாச்சி. இவர் தன்னுடைய நெல்லை தமிழ் பேச்சு மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அண்ணாச்சி முதன் முதலில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை’ என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார்.

அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். தனது வித்தியாசமான மொழி உச்சரிப்பினால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் இமான் அண்ணாச்சி. அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவருக்கு முதன்முதலில் சினிமாவில் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது விக்ரமன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை காதல்’ படத்தில் தான்.

Advertisement

நான் கடவுள் இல்லை :

அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் கூட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி, நடித்த “நான் கடவுள் இல்லை” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சமுத்திரக்கனி, இனியா, ரோகினி, சரவணன், சாக்ஷி அகர்வால், போன்றோர் நடித்திருந்தநிலையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்றது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சி நடித்திருந்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பரிச்சயமான முகங்களில் ஒருவராக இமான் அண்ணாச்சி இருந்தார்.

குடும்பம் :

அண்ணாச்சி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் தான்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தன்னுடைய மனைவி குறித்து பேசியிருந்தார். அதில் ‘நான் மிகவும் சிறிய பள்ளியில்தான் படித்தேன். அதில் மொத்தமே இரண்டு ஆசிரியர்கள் தான் இருப்பார்கள். நான் படித்து முடித்த பள்ளியில் பச்சமுத்து என்ற ஒரு ஆசிரியர் பணி புரிந்து வந்தா.ர் அவர்மகளை தான் நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement

இமான் அண்ணாச்சி அண்ணன் :

இந்த நிலையில் தான் இமான் அண்ணாச்சியின் சகோதர் சைபர் கிராம் போலீஸில் புகாரளித்துள்ளார். இமான் அண்ணாச்சியின் சகோதரர் செல்வகுமார் சென்னை அருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் 10000 ரூபாய் கொடுப்பதாக ஒரு குறுந்செய்தி அவரது போனுக்கு வந்துள்ளது. அதில் அவரது வாங்கி கணக்கில் கூடுதல் மதிப்பெண் இருப்பதினால் அந்த 10000 ரூபாய் கிடைக்கும் என்றும், அதற்கு இன்றே கடைசிநாள் என்று அந்த குறுந்செய்தியில் வந்திருக்கிறது.

Advertisement

இந்நிலையில் 10000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு கிளிக் செய்து தன்னுடைய வாங்கி கணக்கு விவரத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரது வாங்கி கணக்கு மற்றும் அவரது மகள்கள் வாங்கி கணக்கில் இருந்து திடீரென இருந்து 1 லட்சத்தி 64ஆயிரம் ரூபாயை 3 தவணைகளில் மார்ப நபர்கள் திருடி உள்ளனர். இந்நிலையில் இவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement