-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

பூர்வீக கிராமத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிலை – எங்கு இடம் தெரியுமா?

0
293

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பூர்விக ஊரில் சிலை வைத்திருக்கும் தகவல் தான் தற்போது வீட்டில் வைரலாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கோணேட்டம் பேட்டை என்ற கிராமம் இருக்கிறது. இது தான் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் குடும்பத்தின் பூர்வீக ஊர். இந்த கிராமத்தில் தான் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் தன்னுடைய சிறுவயது பருவத்தை கழித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இந்த ஊரில் தான் இவர்களுடைய பூர்வீக வீடும் இருக்கிறது. மேலும், அந்த வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியம் நினைவை போற்றும் வகையில் சமீபகாலமாக அவருடைய சிலை அமைக்கும் பணியை அவருடைய குடும்பத்தினர் செய்து கொண்டு வந்திருந்தார்கள். இந்நிலையில்,சமீபத்தில் தான் இந்த சிலை பணி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இவர்களுடைய பூர்வீக வீட்டில் எஸ்.பி சுப்பிரமணியத்தின் நாலடி உயரம் கொண்ட மார்பளவு பால் நிறக்கற்சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிலை :

இதனுடைய திறப்புவிழா நேற்று தான் தான் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாலசுப்ரமணியத்தின் மனைவி சாவித்திரி, தங்கையும் திரைப்பட பின்னணிப் பாடகி எஸ்.பி சைலஜா, அவருடைய கணவர் சுதாகர், குடும்ப உறுப்பினர்கள் என சிலர் கலந்து கொண்டு பாலசுப்ரமணியத்தின் திருவுருவ சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தி இருந்தார்கள்.

வைரலாகும் புகைப்படம்:

-விளம்பரம்-

அதற்குப் பின் இந்த நிகழ்வில் பொதுமக்களும் பங்கேற்று எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலருமே அவருடைய குடும்பத்தினரின் செயலை பாராட்டி வருகிறார்கள். இந்திய நாட்டின் மிகச் சிறந்த பின்னணி பாடகரும், நடிகராகவும் திகழ்ந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.

-விளம்பரம்-

எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்த தகவல்:

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் சிவாஜி துவங்கி தற்போதுள்ள விஜய், அஜித் வரை அணைத்து முன்னனி ஹீரோக்களுக்கு பாடலை பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து இருந்தார். அதோடு இவர் ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய முறை பெற்று இருந்தார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறப்பு:

பின் கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோன தொற்றின் காரணமாக எஸ்.பி.பி. அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்ட போதும் அவருக்கு ஏற்பட்ட உடல் நிலை கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார். மேலும், எஸ்.பி.பியின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரின் இழப்பு பேரிழப்பாக இருந்தாலும் இன்றும் அவர் பாடிய பாடல் வழியாக ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news