அலட்சியமாகவும், கவனக்குறைவாக இருந்தவர் மீது வழக்கு – வாக்குமூலம் அளித்த இணை இயக்குனர்.

0
2471
indian-2
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து உள்ளார்கள். தற்போது இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் என்று பலர் நடித்து வருகின்றனர். இந்தியன் 2 திரைப்படம் பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் நடைபெற்று வந்தது.

-விளம்பரம்-
krishna
கிருஷ்ணன்

இந்த படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிக்காக நாசரேத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. 19-2-2020 ஆம் அன்று இரவு படத்தின் சண்டைக் காட்சிக்காக லைட்டிங் செய்யும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டிருந்தது. அப்போது படப்பிடிப்பின் போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து மூன்று பேர் அநியாயமாக உயிர் இழந்து உள்ளார்கள். 10 பேர் பலத்த படுகாயம் அடைந்து உள்ளனர். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த விபத்தில் காயமடைந்த இணை இயக்குனர் பரத்குமார் என்பவர் இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் இளங்கோவிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, கடந்த 10 நாட்களாக ஈவிபி பிலிம் சிட்டியில் இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன் இரவு படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதால் அதை சுற்றிலும் 5 ராட்சச கிரேன்கள் பயன்படுத்தி வந்தார்கள். அதில் 35 அடி உயரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கிரேனை ராஜன் என்பவர் இயக்கி வந்திருந்தார். திடீரென்று அந்த கிரீன் கிழக்கு பக்கமாக சாய்ந்து கீழே விழுந்ததில் சந்திரன் என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை சிதறி சம்பவ இடத்திலே இறந்தார். பல பேர் ரத்த காயங்கள் ஏற்பட்டன. எங்கள் அனைவரையும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். பின்னர் மருத்துவர்கள் பரிசோதித்து கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகியோர் இறந்துவிட்டதாக உறுதி செய்தார்கள்.

kamal

காயமடைந்த நாங்கள் சிகிச்சை பெற்றுவருகிறோம். மிகவும் அலட்சியமாகவும், கவனக்குறைவாக இருந்த ராஜன் மீதும், அஜாக்கிரதையாக எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் இருந்த லைகா புரொடக்ஷன் மேனேஜர் சுந்தர்ராஜன் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். இணை இயக்குனரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கிரேன் ஆபரேட்டர் ராஜன், மேனேஜர் சுந்தரராஜன் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 287, 337, 338, 304 (ஏ) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கை பூந்தமல்லி உதவி கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், படப்பிடிப்பு தளத்தில் இருந்து அனைவரையும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதால் இயக்குனர் சங்கர், நடிகர், நடிகைகள் அனைவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement