துணை இயக்குனர் கூட இல்லை. ஆனால், பட குழுவில் ஓடி ஓடி வேலை செய்த இவர் யார் தெரியுமா ?

0
2695
- Advertisement -

உலகநாயகன் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று(பிப்ரவரி 19) இரவு கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலகநாயகன் கமல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் என்று பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்காக நசரத்பேட்டையிலுள்ள  இ வி பி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது.

-விளம்பரம்-
விபத்து நடந்த இடம்

- Advertisement -

நேற்றைய படப்பிடிப்பில் நடிகர் கமலும் கலந்துகொண்டார், நேற்று இரவு, படப்பிடிப்பின்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இந்த கிரேன் மானிட்டர் எனும் படப்பிடிப்புக் காட்சிகளைப் பார்க்கும் கூடாரம் மீது விழுந்தது. அந்தப் பகுதியில்தான் இயக்குநர் ஷங்கர், உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் இருந்தனர். இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குநர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது என மூன்று பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

இதையும் பாருங்க : நீச்சல் குளம் சூடாகுது பேபி. வேதிகா வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படத்தை கண்டு புலம்பும் ரசிகர்கள்.

-விளம்பரம்-

இதில் கிருஷ்ணா என்பவர் பிரபல கார்ட்டூனிஸ்ட்டான மதன் அவர்களின் மருமகன் என்பது தெரியவந்துள்ளது. அதே போல இந்த விபத்தில் மரணமடைந்த மது என்பவர் தயாரிப்பு உதவியாளராக இந்தியன் 2 வில் பணியாற்றி வந்தார். இவர், ரஜினியின் காலா, விஜய்யின் சர்கார், அஜித்தின் நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் தயாரிப்பு குழுவில் பணியாற்றியவர். படப்பிடிப்பு தளத்தில் ஓடி ஓடி வேலை செய்யக்கூடிய இவர் ரஜினியிடம் பாராட்டு பெற்றுள்ளார்.

மேலும், நடிகர் அஜித் இவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இவரின் இழப்பு கோலிவுட்டில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மது பலியானதை நம்பவே முடியவில்லை என்று படக்குழுவை சேர்ந்தவர்கள் கண்ணீர்விட்டு வருகிறார்கள்.  இந்த சம்பவம் ஷூட்டிங் இல்லாத போது நடந்ததால் பலர் தப்பி விட்டனர். ஒருவேளை படப்பிடிப்பு நடக்கும் போது இந்த சம்வம் நடந்திருந்தால் நிலைமை மிகவும் மோசமாகியிருக்கும் என கூறுகிறார் விபத்தை நேரில் பார்த்தவர்கள்.

Advertisement