தடைபட்டு போன இந்தியன் 2 படப்பிடிப்புகள்..!ஆரம்பத்திலேயே தாமதமா..!சோகத்தில் ரசிகர்கள்..!

0
388

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த “இந்தியன் ” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டவது பாகம் தற்போது உருவாக உள்ளது.

கமல் தற்போது, தனது அரசியல் பணிகளுக்கு இடையே உடலமைப்பை மாற்றியமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் கமல். அப்பணிகள் முடிந்து, டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்க, அரங்கும் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டது. இதனை கலை இயக்குநர் முத்துராஜ் கவனித்து வந்தார்.

இப்பணிகள் முடிவு பெறாத காரணத்தால், 2019-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கலாம் என்று ஒத்திவைத்துவிட்டார்கள். மேலும், மார்கழி மாதம் துவங்குவதால், இப்போது ஆரம்பிக்க வேண்டாம் என்ற முடிவு எடுத்துள்ளனர். 2019-ல் தொடங்கப்பட்டு, 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’க்கான வசனங்களை எழுதியுள்ளனர். கமலுடன் காஜல் அகர்வால் நடிப்பது மட்டும் உறுதியாகியுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பணிபுரியவுள்ளார்.