அனைவரும் எதிர்பார்த்த இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன். கடைசியாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த விக்ரம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. இதனை அடுத்து கமலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த “இந்தியன்” படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது.

Advertisement

இந்தியன் 2 படம்:

இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து இருந்தார்கள் படக்குழு. 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வந்தது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். வெற்றிகரமாக படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

படம் குறித்த தகவல்:

அப்போது கமலஹாசன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதே சமயம் சட்ட மன்ற தேர்தலில் கமல் பிசியாக இருந்ததால் அவர் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். சிறிய இடைவெளிக்கு பின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து இருந்தார்கள். அதில் 8 பேர் படுகாயமடைந்து இருந்தார்கள். இதனால் மீண்டும்படப்பிடிப்பு நின்று விட்டது. இப்படி பல பிரச்சனைகளின் நடுவில் இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்கியது.

Advertisement

படத்தின் ரீலிஸ் தேதி:

மேலும், இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். தற்போது விவேக் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு ஜோக்கர் திரைப்படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் நடித்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. சில தினங்களுக்கு முன் இந்த படத்தினுடைய பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அனைவர் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியன் 2 படம் ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கிறது.

Advertisement

ட்ரைலர் வீடியோ:

இதனால் படக்குழுவினர் புரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தினுடைய டிரைலர் வெளியாகி இருக்கிறது. படத்தின் ட்ரைலரில் மறைந்த நடிகர்கள் நெடுமுடி வேணு, மனோ பாலா உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கின்றனர். ஆனால், விவேக்கின் காட்சிகள் ட்ரைலரில் இடம்பெறவிலை. மேலும், பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் ஷர்ட் லெஸ் சண்டை காட்சியில் நடித்துள்ளார் கமல். இந்தியன் முதல் பாகம் அளவிற்கு சேனாதிபதி மக்கள் மனதில் இடம்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்

Advertisement