இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படம் பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிக்காக நாசரேத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. இரவு படத்தின் சண்டைக் காட்சிக்காக லைட்டிங் செய்யும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டிருந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து உள்ளார்கள்.
கடந்த 19 ஆம் தேதி புதன் கிழமை இரவு இந்தியன் 2 செட்டில் ஏற்பட்ட அந்த கோர சம்பவத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குநர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது என மூன்று பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்தனர். இதில் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழக்க, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனைக்குச் சென்ற கமல் `கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சு… கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சு?’ எனத் திரும்பத் திரும்ப கேட்டுள்ளார்.
இதையும் பாருங்க : ‘பிரபல நடிகரின் மனைவியாகிட்டேன்’ இரண்டாம் திருமணம் செய்து கொண்டாரா மீரா மிதுன் ?
கிருஷ்ணா இறந்துவிட்டார் என அருகிலிருந்தவர்கள் சொன்னதைக் கேட்டதும் அங்கேயே கதறி அழுதிருக்கிறார் கமல். இந்த விபத்தில் உயிர் இழந்த கிருஷ்ணா வேறு யாரும் இல்லை. பிரபல கார்டூனிஸ்ட், விமர்சகர், நடிகர் என்ற பன் முகங்களை கொண்ட கார்டூனிஸ்ட் மதன் அவர்களின் மருமகன் தான். மதனின் மருமகனான கிருஷ்ணா இந்தியன் 2 படத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.
மேலும், கிருஷ்ணா மதன் இளையமகள் அமிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு விளம்பர படங்களையும் கார்ப்பரேட் படங்களையும் எடுத்துள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி திருமணமான 4 ஆண்டுகளில் பிஞ்சு மகனையும் விட்டு கிருஷ்ணா உயிரிழந்து இருப்பது மிகவும் கொடுமையான ஒரு விஷயம் தான்.