அரசியல் கட்சி தொடங்கிய கமலிடம் அஸ்வின் எழுப்பிய கேள்வி ? விவரம் உள்ளே

0
3586
Ravichandran ashwi

ஜெயலலிதா இறந்த ஒரு வருடத்தில் அரசியல் கட்சி துவங்கி பெயரையும் அறிவித்துவிட்டார் நடிகர் கமல்ஹாசன். ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற இந்த கட்சிக்கு இந்தியாவின் முக்கிய தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவருக்கு என்னதான் பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தாலும், கொள்கையை தெளிவாக அவர் அறிவிக்கும் வரை பெரும்பான்மை மக்களுக்கு அவருடைய கட்சி இருப்பதே தெரியப்போவது இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின், கமலின் அரசியல் துவக்கத்தை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.தமிழகத்தின் இன்னொரு சூப்பர்ஸ்டார் அரசியலுக்கு வருகிறார். இவர் மூலமாவது தமிழகத்திற்கு அரசியல் மாற்றம் கிடைக்குமா? என கேள்வி கேட்டுள்ளார் அஸ்வின்.