உலகின் தலை சிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று (பிப்ரவரி 25) 91 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

குனீத் மோங்கா:

இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்து தேர்வு சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகர்கள், துணை நடிகர், நடிகைகள், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட 24 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை, இந்தியாவின் “பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்” வென்றுள்ளது.

Advertisement

இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த குறும்படத்தை இந்தியாவைச் சேர்ந்த குனீத் மோங்கா என்ற பெண் தயாரித்து இருந்தார். இந்தப் படத்தை, ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் 25 வயதான இளம்பெண், ராய்க்கா ஸெட்டாப்ச்சி என்பவர் இயக்கி இருந்தார்.

கோவை முருகானந்தம்:

இந்தக் குறும்படமானது, எளிய விலை நாப்கின்களை தயாரிப்பதற்காக கோவை அருணாச்சலம் முருகானந்தம் தயாரித்த எந்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. மேலும்,
மாதவிடாயின் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த படம் உணர்த்தியது.

Advertisement

இந்த நிலையில் தற்போது நடந்து வரும் 91 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்த குறும்படம் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டு விருதினை பெற்றுள்ளது. இந்த விருதை வென்ற இந்த குறும்படத்தின் தயரிப்பாளர் குனீத் மோங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்களாகிய நாம் வென்று விட்டோம் என்று மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement