தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மணிரத்னம் ஒருவர். மேலும், மணிரத்னம் இயக்கிய “பம்பாய் ” திரைப்படத்தின் மூலம் நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் அறிமுகமானார். இந்த ஒரு படத்திலே தமிழக மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். நடிகை மனிஷா கொய்ராலா நேபாளத்தைச் சேர்ந்தவர். இவர் நேபாள–இந்திய நடிகை ஆவார். இவர் முதன் முதலில் திரையுலகிற்கு நேபாள மொழியில் ‘ஃபெரி பெட்டாலா’ என்ற படத்தில் தான் நடித்தார். அதற்குப் பிறகு இந்திய சினிமா உலகில் நடிக்க துவங்கினார். அதுவும் ஹிந்தியில் தான் இவரது முதல் படமான ‘சௌடாகர்’ 1991ல் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்தார். இவர் அதிகமாக ஹிந்தி, தமிழ் மொழி படங்களில் நடித்து உள்ளார்.

அதோடு தமிழில் கமலஹாசனுடன் ‘இந்தியன்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘பாபா’, அர்ஜுனுடன் ‘முதல்வர்’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருடைய நடிப்பிற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு என்று கூட சொல்லலாம். மேலும்,90களில் நடித்த முன்னணி நடிகைகளுக்கு பயங்கர டஃப் கொடுத்த நடிகை என்று கூட சொல்லலாம். பல ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மாப்பிள்ளை’ படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவை எட்டிப்பார்த்தார் மனிஷா கொய்ராலா. இவர் இந்தி மொழி படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார். அது மட்டும் இல்லைங்க கடந்த 2012 ஆம் ஆண்டு மனிஷா கொய்ராலா அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : பிகில் படம் வெற்றியா ? தோல்வியா ? பாலாஜி ஹாசனின், ஐயா ஜோஸ்ஸ்ஸ்சியம்…

Advertisement

இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. மேலும்,இவர் புற்றுநோய் சிகிச்சைக்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். தற்போது அவர் புற்றுநோய் விழிப்புணர்வு சம்பந்தமான பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து நைனிடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மனிஷா கொய்ராலா அவர்கள் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் மக்களுக்கு தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு புத்தகம் எழுதி உள்ளேன் என்று தெரிவித்தார்.மேலும்,அவர் கூறியது, என்னைப் பார்த்து பேசுபவர்கள் எல்லாம் புற்றுநோயிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? என்று நலம் விசாரிக்கும் போது நான் கவலைப்பட மாட்டேன்.

அது மட்டும் இல்லைங்க நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உடன் என்னுடைய நடிப்பு குறித்து பேசாமல் என்னுடைய வியாதி குறித்து பேசத் தொடங்கிவிட்டார்கள். மேலும், எனது நடிப்பு திறமையால் இந்த நிலைமையை நான் மாற்றுவேன். மக்கள் மிண்டும் என்னை ஒரு நடிகையாக பாராட்டும்படி மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போது நான் மரண வாயிலுக்கு சென்று வந்த உணர்வு இருந்தது. எனக்கு ஆரம்பத்தில் இருந்தே மது பழக்கம் இருந்தது. இந்தப் பழக்கத்தினால் தான் என்னுடைய வாழ்க்கையே திசை மாறியது என்று கூட சொல்லலாம். மேலும், எனக்கு என் மீதும், என் வாழ்க்கை மீதும் பயங்கரமாக வெறுப்பும், கோபமும் ஏற்பட்டது.

Advertisement

ஆனால், எனக்கு ஏற்பட்ட இந்த புற்றுநோயால் எல்லாத்தையும் விட்டுட்டு தற்போது இயல்பான வாழ்கை வாழ்ந்து வருகிறேன். அதோடு மது பழக்கத்தை முற்றிலும் விட்டுட்டு புதிதாக பிறந்த மனுஷனைப் போல வாழ தொடங்கிவிட்டேன். மேலும், இந்த மது பழக்கம் விட்ட உடன் என்னுடைய வாழ்க்கையில் பல நல்ல விஷயங்களும், மாற்றங்களும் எனக்குள் ஏற்பட்டுள்ளது என்று கூறினார் மனிஷா கொய்ராலா. அவர் தன்னுடைய ரசிகர்களுக்கும், மக்களுக்கும் கூறியது ‘குடிப்பழக்கம் நாட்டிற்க்கு கேடோ ? இல்லையோ? ஆனால் நம்முடைய உடலிற்கு முற்றிலுமான கேடு என்பதை கூறுவார்.

Advertisement
Advertisement