இந்திரஜாவை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய பிரபல சீரியல் நடிகை. குவியும் லைக்ஸ்.

0
47572
indraja
- Advertisement -

தொலைக்காட்சியில் மேடை கலைஞராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரோபோ ஷங்கர். பொதுவாக சினிமாவில் காமெடி நடிகர்களின் வாரிசுகள் களம் இறங்குவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். அந்த வகையில் ரோபோ ஷங்கரின் மகளான இந்திராவும் தற்போது தமிழ் சினிமாவில் அறியப்பட்ட நடிகையாக திகழ்ந்து வருகிறார். அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைபெற்றது.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/B-CnAHrBJNY/

இந்த படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியை கண்டுள்ளது. நயன்தாரா விவேக் யோகிபாபு டேனியல் பாலாஜி கதிர் இந்துஜா என்று பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் ஒரு சில புதுமுக நடிகைகளின் அறிமுகமாகி இருந்தார்கள் அந்த வகையில் காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் ஒருவர். இந்த படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்திரஜா.

- Advertisement -

இதையும் பாருங்க : மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு இதான் சம்பளமா ?

இந்த படத்திற்கு பின்னர் ரோபோ ஷங்கருக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இந்தரஜா. பிகில் திரைப்படத்திற்குப் பின்னர் தனது மகளுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருவதாக ரோபோ சங்கர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். சமீபத்தில் கூட நடிகை இந்திரஜாவுக்கு கடந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு என்ற பிரிவில் விருது கிடைத்து இருந்தது . இந்த விருதை இயக்குனர் அமீர் அவர்கள் கையில் வாங்கி இருந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்திரா மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பல்வேறு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்தது. இந்த நிலையில் நடிகை இந்திரஜா அதன் பின்னர் ட்ரெடிஷனல் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பதிவிட்டிருந்தார் . இதற்கும் ரசிகர்கள் மத்தியில் இருந்து லைக்ஸ் குவிந்துவந்தனர்.

இந்த நிலையில் நடிகை இந்த்ரஜா மீண்டும் ஒரு படு ஸ்டைலிஷான் மேக்கப்பில் போட்டோ போட்டோ ஷூட்டை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த மேக்கப்பை போட்டது வேறு யாரும் இல்லை பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகையான சந்தோஷி தான். இதனால் சந்தோஷிக்கு நன்றி தெறிவித்து இருக்கிறார் நடிகை இந்த்ரஜா.

Advertisement