மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு இதான் சம்பளமா ?

0
31750
lokesh
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் புகழ் வாய்ந்த நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். சமீபத்தில் தான் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த விழாவில் மாஸ்டர் பட நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்க : ஜோதிகாவை வைத்து தனது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைத்துள்ள விசு.

-விளம்பரம்-

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்தும் அதனுடைய பேச்சுக்கள் இன்னும் குறையவில்லை. சமீபத்தில் தான் இந்த படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி, வாதி கம்மிங், அந்த கண்ண பார்த்தா என்ற மூன்று பாடல்கள் வெளியானது. இந்த மூன்று படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் குறித்து பிரபல வலைத்தளம் மூலம் வெளியாகியுள்ளது.

இதை வலைப்பேச்சு மூலம் பிஷ்மி பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பது, மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு முன் நாள் தான் அவருடைய பிறந்த நாள். அன்றைக்கு தான் அவர் ரேஞ்ச் ரோவர் என்ற ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கி உள்ளார். அந்த காரை அவர் லோன் போட்டு தான் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

வீடியோவில் 5 நிமிடத்தில் பார்க்கவும்

மாஸ்டர் படத்தின் போது லோகேஷ் கனகராஜ்க்கு பேசப்பட்ட சம்பளம் ஒன்றரை கோடி. அதற்கு பிறகு மாஸ்டர் படத்தின் விளம்பரம் மக்கள் மத்தியில் பிரபலமானதுடன் இவருடைய சம்பளம் இரட்டிப்பாக்கி 3 கோடி என்று பேசப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் காரணமாக இந்த படம் மே 1 ஆம் தேதி தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதோடு சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ் என பல நடிகர்களின் படமும் மே மாதம் தான் ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது என்று கூறினார்.

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். லோகேஷ் கனகராஜ் அவர்கள் வங்கியில் பணிபுரியும் ஊழியராக தான் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். பின் சிறு சிறு குறும்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதற்கு பிறகு 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற படத்தை இயக்கினார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக்கை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது.

Advertisement