இன்று International Kissing Day – சங்கவி முதல் சமந்தா வரை விஜய் லிப் கிஸ் கொடுத்த டாப் ஏழு நடிகைகள் – இதோ புகைப்படங்கள்.

0
1484
vijay
- Advertisement -

உலகம் முழுதும் ஓவ்வொரு விஷயத்திற்கும் ஒரு தனிப்பட்ட நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சர்வதேச முத்த தினம், இதில் விஜய் எந்தெந்த நடிகைகளுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்தார் என்பதை பார்ப்போம். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய படங்களை பார்ப்பதற்கு தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். அதுவும் சமீப காலமாக விஜய் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. இந்த நிலையில் விஜய்க்கு தற்போது 45 வயது ஆனாலும் இன்னும் இளம் நடிகராக காட்சி அளிக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் இளம் நடிகர்களுக்கு இணையாக விஜய் டப் கொடுக்கிறார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் விஜய் அவர்கள் என்னென்ன படங்களில் நடிகைகளுக்கு ரொமான்ஸ் காட்சிகளில் லிப் கிஸ் கொடுத்து இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : சினிமாவின் மேக்கிங்கைவிட நடிகர்களின் சம்பளம் தான் இங்க அதிகம், அப்புறம் எப்படி நல்ல சினிமா வரும். பார்த்திபனின் சரியான பேச்சு.

சங்கவி:

-விளம்பரம்-

ஆரம்பகாலத்தில் தளபதி விஜயின் காதலி என்று பலராலும் வதந்திகள் பரப்பப்பட்ட நடிகை சங்கவி என்று சொல்லலாம். இவர் விஜயுடன் சேர்ந்து சில படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் படங்களில் இவருக்கும் விஜய்க்கும் இடையே ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். படத்தில் விஜய் அவர்கள் சங்கவிக்கு லிப் கிஸ் கொடுத்து இருக்கிறார்.

ஜோதிகா:

விஜய்யின் சினிமா கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படங்களில் குஷியும் ஒன்று. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்து இருந்தார். குஷி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஜோதிகா மற்றும் விஜய் இருவரும் லிப் கிஸ் கொடுத்து படத்தை முடித்து இருப்பார்கள். இந்த படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

ஸ்ரேயா:

விஜய் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த படம் தான் அழகிய தமிழ் மகன். இந்த படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ரேயா முதல் முறையாக நடித்திருந்தார். இந்த படத்தில் இருவருக்கும் முத்தக் காட்சிகள் இருந்தது.

நயன்தாரா:

விஜய்யின் கேரியரிலேயே கொஞ்சம் சறுக்கல் ஏற்பட்ட படத்தில் வில்லு ஒன்று. பிரபுதேவா இயக்கத்தில் வெளியான படம் தான் வில்லு. இந்த படத்தில் நயன்தாரா பயங்கர கிளாமராக வலம் வந்திருக்கிறார். அதிலும் இந்த படத்தில் விஜய் மற்றும் நயன்தாரா உடைய ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் வேற லெவலில் இருந்தது என்று சொல்லலாம்.

அனுஷ்கா:

வேட்டைக்காரன் படத்தின் மூலம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தவர் அனுஷ்கா. இந்த படத்தில் இடம்பெற்ற சின்ன தாமரை பாடலில் அனுஷ்காவுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சியில் விஜய் கொடுத்திருப்பார். அதற்குப் பிறகுதான் தமிழ் சினிமாவில் அனுஷ்கா ஒரு ரவுண்ட் வந்தார் என்றே சொல்லலாம்.

இலியானா:

ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 இடியட்ஸ் என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் நண்பன். இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்திருந்தார். க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய்க்கும் இலியானாவுக்கும் ஒரு நீண்ட லிப் கிஸ் காட்சி இடம்பிடித்திருக்கிறது.

சமந்தா:

விஜய்யுடன் சமந்தா சில படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். அதில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இந்த படத்தில் என் ஜீவன் என்ற பாடலில் இவர்கள் இருவருக்கும் ஒரு சின்ன உதட்டு முத்தக்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

Advertisement