சினிமாவின் மேக்கிங்கைவிட நடிகர்களின் சம்பளம் தான் இங்க அதிகம், அப்புறம் எப்படி நல்ல சினிமா வரும். பார்த்திபனின் சரியான பேச்சு.

0
426
parthiban
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டு திகழ்கிறார். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக வெளிவந்த “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதுவரை தமிழ் சினிமா உலகில் கொண்டு வராத புது முயற்சியை பார்த்திபன் செய்து இருந்தார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தை பார்த்திபன் அவர்களே தயாரித்தும், இயக்கியும், நடித்தும் இருந்தார். இந்த படத்தில் பார்த்திபன் அவர்கள் ஒன் மேன் ஆர்மி போல நடித்து இருந்தார். இதற்காக ஸ்பெஷல் ஜூரி பிரிவில் தேசிய விருதும், சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருதும் பார்த்திபனுக்கு கிடைத்திருந்தது.

- Advertisement -

ஒத்த செருப்பு சைஸ் 7 படம்:

அதோடு ஒத்த செருப்பு படத்தின் ஹிந்தி ரீமேக்கை நடிகர் அபிஷேக் பச்சனை வைத்து பார்த்திபன் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார்.

இரவின் நிழல் படம்:

அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. அது ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியல் வரை சென்றிருந்தது. தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் கடந்த மார்ச் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. மேலும், லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

-விளம்பரம்-

பார்த்திபன் அளித்த பேட்டி:

கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பார்த்திபன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சினிமா நிலமை குறித்து இயக்குனர் பார்த்திபன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, புது புது விஷயத்தை ரசிக்கும் மக்கள் இருப்பதனால் தான் நாங்கள் இருக்கிறோம். இல்லை என்றால் நாங்கள் செத்து விடுவோம். எங்களுடைய படங்களை எல்லாம் தியேட்டரில் எடுத்துக் கொள்ளக் கூட மாட்டுகிறார்கள். தியேட்டர் பக்கம் போனால் புது நடிகர்கள் யார்? எவ்வளவு பட்ஜெட் படம் என்று தான் கேட்கிறார்கள்.

சினிமா நிலைமை குறித்து சொன்னது:

ஓடிடி தளங்களில் பார்த்தால் அவர்களும் நடிகர்கள் யார்? எத்தனை கோடி என்றுதான் விசாரிக்கிறார்கள். எங்களுக்கு என்ற ஒரு மரியாதையும் கிடையாது. ஹாலிவுட்டில் 500 கோடியில் படமெடுத்தால் 250 கோடி படத்திற்காக செலவு செய்கிறார்கள். ஆனால், நம்ம சினிமாவில் 200 கோடி பட்ஜெட்டில் 125 கோடியை நடிகர்களுக்கு கொடுக்கிறார்கள். அதில் 25 கோடி தான் இயக்குனர்களுக்கு கொடுக்கிறார்கள். அதுவும் அவர்கள் அந்த படம் எடுப்பதற்காக கொடுக்கிறார்கள். சினிமா அப்படிதான் சென்று கொண்டிருக்கின்றது. ஒரு படம் எடுத்தால் பத்து, பதினைந்து கோடி லாபம் வந்தால் போதும் என்று யோசிக்கிறார்கள் என்று வருத்தத்துடன் பேசியிருந்தார்.

Advertisement