மாண்டேலாவை பாராட்டிய Ipl வீரர் – நடராஜன் செய்துள்ள உதவி. அட ரெண்டு பேருக்கும் இப்படி ஒரு உறவா ?

0
6925
yogi
- Advertisement -

யோகி பாபு நடித்த மண்டேலா படத்தை பாராட்டி Ipl கிரிக்கெட் வீரர் சுவாரசியமான தகவல் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் கௌண்டமணி துவங்கி சந்தானம் வரை எத்தனையோ காமெடி நடிகர்கள் ஹீரோவாகவும் கலக்கியுள்ளனர். அந்த வகையில் சமீப காலமாக காமெடி மற்றும் ஹீரோ கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார் நடிகர் யோகி பாபு. தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக் தலைமுறைக்கு பின்னர் தற்போது முன்னணி காமெடியனாக விளங்கி வருவது நடிகர் யோகிபாபு தான். ஆரம்பத்தில் ஒரு சில துணை காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 19 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு. இவர் ஹீரோவாக நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் மாபெரும் வெற்றியடைய அதனை தொடர்ந்து கூர்க்கா, எமதர்ம ராஜா போன்ற பலவேறு படங்களில் ஹீரோவாக நடித்தார் யோகி பாபு.

இதையும் பாருங்க : மறைந்த என் அண்ணன் நினைவாக எனது ஒரு குழந்தைக்கு இப்படி செல்லப் பேர் வைத்துள்ளேன் – சாண்ட்ரா உருக்கமான பதிவு.

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் இவர் மண்டேலா படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். மோகன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கிய மண்டேலா திரைப்படம் கடந்த வாரம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. இப்படத்தில், சமகால அரசியல் நிகழ்வுகளை சலூன் கடைக்காரர் கதாபாத்திரம் மூலம் நையாண்டி செய்யப்பட்டிருந்தது. இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்து யோகி பாபுவை பாராட்டி Ipl-ல்  ஹைதராபாத் அணியில் ஆடி வரும் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.

அதில், சில நாட்களுக்கு முன் நெட்ஃபிளிக்ஸில் ‘மண்டேலா’ திரைப்படம் பார்த்தேன். நடிகர்கள் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன். குறிப்பாக யோகி பாபுவின் நடிப்பு. என்ன ஒரு நடிகர், என்ன ஒரு கதை. அவர் நடராஜனின் நண்பர் என்பது தெரிந்தது. வீடியோ கால் மூலம் என்னை யோகி பாபுவிடம் பேசவைத்தார் என்று கூறியுள்ளார். இதை பார்த்த பலரும் யோகி பாபு, நட்ராஜனின் நண்பர் தானா என்று வியந்து போய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement