மறைந்த என் அண்ணன் நினைவாக எனது ஒரு குழந்தைக்கு இப்படி செல்லப் பேர் வைத்துள்ளேன் – சாண்ட்ரா உருக்கமான பதிவு.

0
15833
sandra
- Advertisement -

சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். மேலும், சினிமாவை போலவே பல்வேறு சின்னத்திரை நடிகர் நடிகைகள் திருமணம் செய்துள்ளார்கள். சேத்தன் – தேவதர்ஷினி , ஸ்ரீகுமார் – ஷமிதா , , சஞ்சீவ் – ப்ரீத்தி, போஸ் வெங்கட், சோனியா சமீபத்தில் சஞ்சீவ் – ஆல்யா மானஸா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம் அந்த வகையில் சீரியலில் ரீல் ஜோடியாக இருந்து தற்போது ரியல் லைப் ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் பிரபல சின்னத்திரை ஜோடிகளான பிரஜின்-சாண்ட்ரா.

-விளம்பரம்-

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல தமிழ் சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான வரும் ‘சின்னத்தம்பி’ சீரியலின் மூலம் பிரபலமான பிரஜனை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கும் சான்ரா ஏன் இத்தனை காலமா குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருக்கமுடன் பதிலளித்தார் சான்ட்ரா.

இதையும் பாருங்க : கர்ணன் படத்தை பார்த்துவிட்டு Ips அதிகாரி விஜயகுமார் போட்ட பதிவு வைரல். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

- Advertisement -

கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த சான்ட்ராவிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இரட்டை குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிரஜின்-சான்ட்ரா தம்பதியினரின் அழகிய இரட்டை தேவதைககளுக்கு கோவிலில் அன்னபிரஷன் விழாவை கொண்டாடியுள்ளனர். அப்படி என்றால் பிறந்ததில் இருந்து பாலை மட்டும் குடித்து வரும் குழந்தைக்கு முதன் முறையாக உணவை கொடுப்பது தான்.

இப்படி ஒரு நிலையில் சாண்ட்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் தனது அண்ணன் மற்றும் அண்ணியின் புகைப்படத்தை தனது குழந்தைகளோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட சாண்ட்ரா. அதனது 2006 ஆம் ஆண்டு தனது அண்ணன் ஒரு விபத்தில் காலமாகிவிட்டதாகவும் அதற்கு அடுத்த நாளே தனது அண்ணி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது மகள்கள் தனது அண்ணன் நட்சத்திரத்தில் பிறந்தார்கள் என்றும் அவரது அண்ணன் தனது மனைவியை பாத்து என்று கூப்பிடுவார் அதனால் தனது ஒரு மகளான ருத்ராவிற்கு பாத்து என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement