சினிமா துறையில் உலகில் எந்த ஒரு முன் அனுபவமும், பின்னணியும் இல்லாமல் வளர்ந்து வந்தவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் என் காதல் கண்மணி படத்தின் மூலம் அறிமுகமானவர்.பின் சேது, காசி,தில் போன்ற சூப்பர் ஹிட் படங்களின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவரை ரசிகர்கள் செல்லமாக சீயான் என்று தான் அழைப்பார்கள். தற்போது சினிமா திரை உலகில் வேற லெவல்ல கலக்கிக் கொண்டிருக்கும் விக்ரம் அவர்கள் கடைசியாக கடாரம்கொண்டான் படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் 58வது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு “சீயான்58 ” என்ற தலைப்பை தற்போதைக்கு வைத்து உள்ளனர் படக்குழு.மேலும், இந்த படத்தை இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்கள் தான் இயக்க உள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளார்கள். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைக்கிறார்கள்.

Advertisement

இன்னொரு இனிப்பான செய்தி என்னவென்றால் இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழ் திரையுலகில் இதுதான் இவருடைய முதல் படமாகும். இதனை தொடர்ந்து சீயான் 58 படத்தில் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். இந்த படத்தில் இருந்து இர்பான் பதான் அவர்கள் சினிமா திரை உலகில் காலடி எடுத்து வைக்க போகிறார் என்றும் கூறிவருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்களும், பிரபலங்களும் இர்பான் பதானுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் இணையங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருடைய நடிப்பில் வர இருக்கும் சீயான் 58 படம் எப்படி? இருக்கும் என்று பல ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றனர் ரசிகர்கள்.

இதையும் பாருங்க : 4 பேருக்கும் என்னை பிடிக்கும்..அதில் இவர் காதலிக்கிறேனு சொன்னார்..மீராவின் புதிய ஷாக்கிங் வீடியோ..

இந்த சீயான் 58 படம் ஆக்ஷன், த்ரில்லர் என பல கதைக்களம் கொண்டு உருவாகியது என படக்குழுவினர் கூறியுள்ளனர். மேலும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அவர்கள் கிரிக்கெட்டில் முக்கிய வீரராகவும் ,தவிர்க்க முடியாத வீரராகவும் இருந்து விளையாடினர். தற்போது கிரிக்கெட்டில் இருந்து இவர் ஓய்வு பெற்று உள்ளார். இந்த நிலையில் இவர் சினிமா துறையிலும் களமிறங்கலாம் என அதிரடி முடிவெடுத்து இறங்கியுள்ளார். இதை தொடர்ந்து, இதற்கு முன்னதாகவே சமூக வலைத்தளங்களில் நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Advertisement

அவரைத் தொடர்ந்து இப்போது இர்பான் பதான் தமிழ் சினிமாவில் காலடி வைக்கிறார் என தகவல் வெளியிட்டுள்ளது. ஆக மொத்தத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் எல்லாமே தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பின் மூலம் சிக்ஸர் அடிக்க போகிறார்கள் என்று கூறுகின்றனர்.கிரிக்கெட்டில் இவர்கள் காட்டும் மாஸ் போல சினிமா திரை உலகில் தங்களுடைய நடிப்பில் எந்த மாதிரியான மாஸ் காட்டப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறிவருகின்றனர் நெட்டிசன்கள்.மேலும், இந்த சீயான் 58 படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து இந்த படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement