4 பேருக்கும் என்னை பிடிக்கும்..அதில் இவர் காதலிக்கிறேனு சொன்னார்..மீராவின் புதிய ஷாக்கிங் வீடியோ..

0
19148
meera-mithun

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு போட்டியாளர்கள் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்திருக்கிறார்கள். ஆனால், சர்ச்சையின் முழு உருவமாக இருந்து வருகிறார் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாடலும் நடிகையுமான மீரா மிதுன் பிக் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாகவே மாடல் அழகி என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக இவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், ஜோ மைக்கேல் என்பவர் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

இவர் மீதிருந்த குற்றச்சாட்டுகளால் மீராமிதுன் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றுவிட்டார். இருப்பினும் இவர் மீதான புகார்கள் வரவே இவரை வைத்து விசாரிக்க போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே நுழைந்தது பெரும் பரபரப்பாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் வீட்டில் இருந்த மீராமிதுன், சேரன் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக சர்ச்சையை கிளப்பி இருந்தார். ஆனால் , குறும்படம் போட்டு சேரன் எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபணமானது. அதன் பின்னரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மீரா மீதும், சேரன் குறித்து பேசிய வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதே போல பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தர்ஷன் தன்னை காதலிப்பதாக கூறி இருந்தார் மீரா மிதுன்.

இதையும் பாருங்க : கவினுக்கு ரியோ கொடுத்த விருது..கடுப்பாகி ரியோவை திட்டி தீர்க்கும் கவின் ரசிகர்கள்..

- Advertisement -

மேலும், பிக்பாஸ் வீட்டிற்கு ரீ என்ட்ரி கொடுத்த போது முகென் மூலம் பிரபலத்தை ஏற்படுத்தி கொள்ளலாம் என்ற நோக்கத்தில் முகெனும், தானும் ஒன்றாக இருப்பது போல வீடியோவை தயார் செய்யுமாறும், அதற்காக நான் பணத்தை கொடுப்பதாகவும், மீராமிதுன் ஆணுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இப்படி இவர் குறித்து பல்வேறு ஆதாரங்கள் வெளியானாலும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று அடிக்கடி வீடியோவை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நேற்று சாண்டி தர்ஷன் முகென் கவின் ஆகிய நால்வரும் வீ ஆர் தி பாய்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது போட்டியாளர்கள் புகைப்படம் இடம் பெற்றிருந்த டி ஷர்ட்டை அணிந்து அவர்களைப்போலவே நடித்துக் காட்டி இருந்தார்கள்.

அப்போது சாண்டி, மீராமிதுன் புகைப்படம் அடங்கிய டீசர்ட் அணிந்து கொண்டு மீராமிதுன் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டதைப் போலவே நடித்திருந்தார். மேலும், இதனை மற்ற போட்டியாளர்களும் மிகவும் பங்கமாக கலாய்த்திருந்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டுள்ள மீரா மீது மீண்டும் புதிய வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில், பாய்ஸ் கேங்க் அனைவருக்குமே தனக்கு இருக்கும் பிரபலத்தை பற்றி நன்றாகவே தெரியும். அவர்கள் அனைவருக்கும் என்னிடம் பேச வேண்டும் என்றுதான் ஆசை. அதனால் எப்போதும் பிக்பாஸ் வீட்டில் என்னுடன் தான் அந்த 4 ஆண்களும் இருந்தார்கள். ஆனால், மற்ற பெண்கள் என்ன சொல்லுவார்கள் என்று என்னிடம் மறைந்து மறைந்து பேசினார்கள். அந்த நான்கு பேருக்குமே என்னை மிகவும் பிடிக்கும் அதில் ஒரு சிலர் என்னிடம் காதலிப்பதாகவும் கூறி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஆனால், யாருக்கும் அதனை வெளிப்படையாக சொல்ல தைரியம் கிடையாது என்னை வைத்து தவறாக பேசி பலர் பிரபலத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள். தற்போது அந்த லிஸ்டில் இந்த நான்கு பேரும் வந்து இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் தனக்கு தமிழ் நடிகர் நடிகைகளை விட சர்வதேச அளவில் பிரபலம் இருக்கிறது என்றும், இங்கே இருக்கும் நடிகர்கள் இந்தியாவை தாண்டினால் யார் என்பது மற்றவர்களுக்குத் தெரியாது என்றும், ஆனால் நான் இந்தியாவில் இருந்து வெளியே சென்றாலும் என்னை பல பேருக்கு தெரியும் அந்த அளவிற்கு நான் சர்வதேச அளவில் பிரபலம் ஆனவர் என்றும் கூறியுள்ளார் மீராமிதுன். அவர் பேசிய பேச்சுக்களை நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள்

Advertisement