இருட்டு அறையில் முரட்டு குத்து தான் பிடித்த படம்..? சர்ச்சையில் முன்னணி நடிகர் பதில்.!

0
2041
- Advertisement -

இளம் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து” படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் கௌதம் கார்த்திகிற்க்கு ஜோடியாக நடித்த யாஷிகா ஆனந்த், இந்த படத்தில் கிடைத்த பிரபலத்தின் மூலம் ‘பிக் பாஸ் 2 ‘ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்பற்று வருகிறார்.

-விளம்பரம்-

Iruttu Araiyil Murattu Kuththu

- Advertisement -

இந்நிலையில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலின் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ‘நீங்கள், உங்கள் சக நண்பர்கள் படங்களின் ட்ரைலர்களை ட்விட்டரில் பார்த்துள்ளீர்களா ? சமீபத்தில் அது போல ரசித்தது எது என்று கேள்விகேட்டிருந்தார். இதற்கு கமல் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்று பதிலளித்திருந்தார்

தமிழ் சினிமாவின் இரட்டை மொழி வசனமும், ஆபாச காட்சிகலும் கொண்ட இந்த படத்திற்கு ஒரு சில ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. ஆனால், அதே அளவிற்கு இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பும், கண்டனமும் வலுத்து வந்தது. ஆனால், இந்த படத்தை போய் கமல் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

kamal-haasan

இந்த படம் சமூகத்திற்கு ஒரு கேவலமான உதாரணமாக தான் இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், திரையுலகிலும், அரசியல் காட்சியிலும் உள்ள கமல் இது போன்ற படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளததை கண்டு ரசிகர்கள் சற்று அதிருப்தி அடைந்தனர். ஆனால், பின்னர் தான் தெரிந்தது அது கமலின் பெயரில் உள்ள போலி ட்விட்டர் கணக்கு என்று.

Advertisement