இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படைப்பு.! இதிலும் ஒரு ஷாக் கொடுத்துள்ளார்.!

By Rajkumar · 7/2/2019

கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'ஹர ஹர மஹாதேவிக்கி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அதன் பின்னர் 'இருட்டு அறையில் முரட்டு குத்து ' படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளசுகளையும் கவர்ந்தார்.

இறுதியாக ஆர்யா மற்றும் ஷாயிஷாவை வைத்து 'கஜினிகாந்த்' படத்தை இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது. தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தெலுங்கில் ரீ மேக் செய்து வருகிறார்.

இதையும் பாருங்க : கவர்ச்சியில் தமிழை மிஞ்சிய இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் தெலுகு ரீ-மேக்

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தமிழில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.இந்த படத்தில் கௌதம் கார்த்திக்குடன் மூன்றாவது முறையாக இணையவுள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு '
 தீமை தான் வெல்லும் ' என்று பெயரிட்டுள்ளனர்.

திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவெனில் இந்த படத்தில் கதாநாயகியே இல்லையாம். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

behindtalkies AMP · Quick view
View full