இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படைப்பு.! இதிலும் ஒரு ஷாக் கொடுத்துள்ளார்.!

0
1005
Goutham-karthik
- Advertisement -

கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஹர ஹர மஹாதேவிக்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அதன் பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘ படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளசுகளையும் கவர்ந்தார்.

-விளம்பரம்-

இறுதியாக ஆர்யா மற்றும் ஷாயிஷாவை வைத்து ‘கஜினிகாந்த்’ படத்தை இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது. தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தெலுங்கில் ரீ மேக் செய்து வருகிறார்.

இதையும் பாருங்க : கவர்ச்சியில் தமிழை மிஞ்சிய இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் தெலுகு ரீ-மேக்

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தமிழில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.இந்த படத்தில் கௌதம் கார்த்திக்குடன் மூன்றாவது முறையாக இணையவுள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘
 தீமை தான் வெல்லும் ‘ என்று பெயரிட்டுள்ளனர்.

திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவெனில் இந்த படத்தில் கதாநாயகியே இல்லையாம். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement