இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகம். ஹீரோ யாருனு தெரிஞ்சா ஷாக்காவீங்க.

0
7151
iruttu-arayil-murattu-kuthu-2
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாகவே அடல்ட் காமெடி படங்கள் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஹர ஹர மஹாதேவிக்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அதன் பின்னர் கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘ படத்தின் மூலமும்ம் ஒட்டுமொத்த இளசுகளையும் கவர்ந்தார். இந்த திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

-விளம்பரம்-
Image result for iruttu arayil murattu kuthu director

- Advertisement -

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தொடர்ந்து ஆர்யா மற்றும் ஷாயிஷாவை வைத்து ‘கஜினிகாந்த்’ படத்தை இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது. இருப்பினும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தெலுங்கில் ரீ மேக் செய்து அதிலும் வெற்றிகண்டார் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இந்த நிலையில் இருட்டு அறையில் முருட்டு குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர்.

இதையும் பாருங்க : ஐயகோ மீரா மிதுனின் ஊழல் தடுப்பு அதிகாரி பதவி பறிக்கப்பட்டது. கண்ணீர் இல்லையா? கடையடைப்பு இல்லையா? கலாய்க்கும் நெட்டிசன்கள்.

ஆனால், இந்த படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்க மறுப்பு தெரிவித்ததால் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பக்கத்தில் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமாரே ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். மேலும், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் முதல் பாகத்தில் நடித்த சாம்ஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். மேலும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளை பற்றிய தகவலும் விரைவில் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is director-santhosh-p-jayakumar.jpg

மேலும், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் முதல் பக்கத்தில் நடித்த யாஷிகாவும் இந்த படத்தில் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறதாம். இது ஒரு புறம் இருக்க தீமை தான் வெல்லும் என்ற படத்தையும் இயக்க இருக்கிறார் இந்த முரட்டு இயக்குனர். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சந்தோஷ் பி ராஜாவுடன் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார் கௌதம் கார்த்திக்.

Advertisement