மாநிலம் முழுதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியா அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் கடந்த சில நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடத்திவருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இதுதொடர்பான ஓர் வழக்கில் நீதிமன்றம் இன்று ஜாக்டோ–ஜியோ அமைப்பை கண்டித்திருந்தது.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபவரை உடனடியாக ஒரு மணிநேரத்தில் வேலையில் இருந்து தூக்கலாம் என்றும்,
வேலை செய்யாத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தது.

Advertisement

இதனால் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டு தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் வாங்கிக்கொள்வதாக போராட்டக்குழுவினர் தற்போது தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதுதொடர்பாக இன்று டிவிட்டரில் பதிவிட்ட கமல்
“வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை என்பது குதிரை பேர அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா? வேலைக்கு செல்லவில்லை என்றால் ஊதியம் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானா”
என்று அரசு ஊழியர்களுக்கு ஆதரவாகவும்,நீதிமன்றத்துக்கு எதிராகவும் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசு குறித்த அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்துகளுக்கும், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கும் இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சந்திரசேகர்.

Advertisement