கோலமாவு கோகிலா போல பீஸ்ட் படமும் காபி கதையா ? அதுவும் இந்த காமெடி நடிகரோட படம் மாதிரியாம் ?

0
1189
beast
- Advertisement -

விஜய்யின் பீஸ்ட் படம் யோகி பாபு நடித்த கூர்க்கா படம் மாதிரியே இருக்கு என்று பீஸ்ட் பட துணை நடிகர் ஒருவர் சொன்ன வார்த்தை தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். அதுமட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது.

-விளம்பரம்-

தற்போது விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்க்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பீஸ்ட் படம் கூர்க்கா படம் போல் இருக்கு என்று பீஸ்ட் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் சொன்னதால் சோசியல் மீடியாவில் பல சலசலப்புகள் எழுந்து உள்ளது. இதற்கு முன்னாடியே இயக்குனர் நெல்சன் அவர்கள் கோலமாவு கோகிலா படத்தை எடுத்து இருந்தார். இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான வீ ஆர் தி மில்லர்ஸ் படத்தின் தழுவல்.

இதையும் பாருங்க : தன் மூன்றாம் மகனின் மூன்றாம் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரம்பா.

- Advertisement -

நெல்சன் அவர்கள் கோலமாவு கோகிலா படத்தை எடுக்கலாம் என்று நினைக்கும் போது ஹாலிவுட்டில் வீ ஆர் தி மில்லர்ஸ் என்ற படம் வெளியானது. அந்த படத்தின் கான்செப்டை வைத்து தான் கோலமாவு கோகிலா படத்தை எடுத்தார். அப்படியே அந்த படத்தில் இருந்த கதாபாத்திரங்கள்,கதைக்களம் என அனைத்தையும் வீ ஆர் தி மில்லர்ஸ் படம் மாதிரியே வைத்து கொஞ்சம் தமிழ் சினிமாவிற்கு ஏற்றவாறு பஞ்சர் டிங்கரிங் செய்தார் என்ற குற்றசாட்டு இன்றும் உண்டு. இந்த நிலையில் நெல்சனின் பீஸ்ட் படமும் யோகிபாபு நடித்த கூர்க்கா படத்தின் கான்செப்ட் என்று சொல்லப்படுகிறது.

Dhanush releases Gurkha teaser: Yogi Babu is now a hero - Movies News

அதோடு கூர்க்கா படமே மால் காப் என்ற படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. பீஸ்டில் ஷாப்பிங் மால் காட்சி இருப்பதால் காப்பி என சொல்லமுடியுமா? ஆனால், நெல்சனின் முதல் பட விவகாரம் குறித்து சோசியல் மீடியாவில் சர்ச்சைகள் இருப்பதால் பீஸ்ட் படம் குறித்து பல வதந்திகள் எழுந்து வருகின்றனர். உண்மையிலேயே பீஸ்ட் படம் வெளியே வந்தால் தான் எந்த அளவிற்கு உண்மை என்று தெரிய வரும் என சிலர் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement