நடிகை பானுப்ரியாவா இது.!ஷாக் ஆன ரசிகர்கள்.! பாத்தா நம்பமாட்டீங்க.! புகைப்படம் உள்ளே!

0
2078
bhanupriya

தமிழ் சினிமாவின் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை பானுப்ரியா. தமிழ் சினிமாவில் ரஜினி,கமல், விஜயகாந்த் என்று அனைத்து முன்னணி ஹீரோகளுடனும் ஒரு ரவுண்டு வந்துவிட்டார்.

banupriya actress

தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் நடிகை பானுப்ரியா. 80- 90 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடித்து வந்த இவர், தற்போதும் படங்களில் நடித்து வருகிறார். இதுவரை 150 படங்களுக்கு மேல் நடிகை பானுப்ரிய நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மகளீர் மட்டும்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

ஒரு காலத்தில் சிக்கென இருந்த நடிகை பானுபிரியா, பின்னர் வயதாகி விட மிகவும் உடல் எடை கூடி சற்று பருமனாக மாறிவிட்டார். தற்போது 51 வயதாகும் பானுப்ரிய தனது உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்தில் மாறி இருக்கிறார். அவரது சமீப புகைப்படம் ஒன்றை நடிகை குஷ்பு வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்திற்கு பல்வேறு ரசிகர்களும் வாவ், சூப்பர் என்று கமெண்ட் செய்த வண்ணம் இருக்கின்றனர்.

banupriya

நடிகை பானுப்ரியவும் நடிகை குஷ்புவும் நெருங்கிய தோழிகள். மேலும், நடிகர் சத்யராஜ் நடித்த ‘பிரம்மன்’ திரைப்படத்திலும் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.சமீபத்தில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பானுப்ரியாவின் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரின் தோட்றத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு ஒல்லியாக மாறிவிட்டாரே என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.