லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ஹாலிவுட் சீரிஸ் ஒன்றின் காப்பி என்ற புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது. தமிழில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தையும் இயக்கி இருந்தார். இதுவும் மாபெரும் ஹிட் அடித்தது.

இப்படி தான் இயக்கிய முதல் மூன்று படங்களும் மாபெரும் ஹிட் அடிக்க பின்னர் இவர் கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கி இருந்தார். கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என்று பலர் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததோடு வசூலையும் வாரி குவித்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ” என்ற சீரிஸ்ஸின் காப்பி என்று முகநூல் வாசி ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement

ஒரு நடுத்தர வயது Ex-cop. ஏன் சீனியர் என்றே சொல்லலாம். அவர் மகனும் டிபார்ட்மெண்ட்டில் ஒரு இளம் ஆபிசர். ஊழலில் ஊறிப்போன, ட்ரக்ஸ் கேங் என சகவாசம் கொண்ட சக, உயரதிகாரிகள். இச்சூழலில் நியாயமாய் இருக்க போராடுகிறார்.அவரின் அந்த பதிவில் ‘ஒருக்கட்டத்தில் மகனின் உயிருக்கே உலை வைக்கும் ஒரு உண்மை தெரிய வருகிறது. கெட்ட ஆபிசர்கள் எங்களோடு சேர்ந்துவிடு என்கிறார்கள். மகன் தர்மத்தின் பக்கம் நிற்க அவரை போலீஸ்காரர்களே கொன்றுவிடுகிறார்கள்.

அதிலிருந்து அப்பாவிற்கு வாழ்வே சூன்யமாகி விடுகிறது. பையன் செத்து 6 மாதமாய் நிரந்தர குடிகாரர் ஆகிவிடுகிறார். மருமகளுக்கு மாமனாரின் மீது வெறுப்பு.ஒருநாள் போதையில் இருக்கும் இவரையும் கொன்றுவிடலாம் என ஊழல் போலீஸ் தனியே கூட்டிப்போய் கொல்லப்போகையில், சட்டென போதை தெளிந்து கெட்டபோலீஸை சுட்டு வீழ்த்துகிறார். அவர் போதையே நடிப்பு. 6 மாதங்களாய் அப்படியொரு பிம்பத்தை வெளியுலகுக்கு கவனமாய் கட்டமைத்திருக்கிறார் அந்த அப்பா

Advertisement

ஒருக்கட்டத்தில் மருமகளுக்கு தன் மாமனார் குடிகாரரோ, கெட்டவரோ அல்ல, கணவரையும் யார் கொன்றார்கள், இவர் பழிவாங்கியது என எல்லா உண்மையும் புரிகிறது. அது மட்டுமின்றி வேறெந்த உறவுமில்லாதவர், தன் பேரக்குழந்தையை காப்பதை ஒரு மிஷனாகவே மாற்றிக்கொள்கிறார் அந்த Ex-cop தாத்தா.இது Better Call Saul சீரிஸில் முதல் சீசனில் மைக் எனப்படும் ஒரு கேரக்டரின் ஃப்ளாஷ்பேக் எபிசோட்.

Advertisement

வெளியான வருடம் 2015. லோகேஷ் கனகராஜ் சார்..என்ன சிம்ரன் இதெல்லாம்? இவ்வாறாக அந்த முகநூல் வாசி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, பலரும் இந்த பதிவை ட்விட்டரில் பகிர்ந்து இதுவே அட்லீ செய்து இருந்தால் சும்மாவிட்டு இருப்பார்களா என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement