நீயெல்லாம் தமிழ் ஹீரோயினுக்கு செட்டாக மாட்ட…! அசிங்கப்பட்ட காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ்!

0
6270
Aishwarya Rajesh
- Advertisement -

இரு சிறுவர்களின் அம்மாவாக ‘காக்கா முட்டை’யில் கலங்க வைத்தவர், காமுக்காபட்டி அன்புச்செல்வியாக ‘தர்மதுரை’யில் நெகிழவைத்தார்.வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்காமல் அவற்றில் தனக்கானதைத் தேர்வுசெய்வதுதான் ஐஸ்வர்யாவின் ஸ்பெஷல்.அந்தத் தன்மைதான் மணிரத்னம், கௌதம் மேனன், வெற்றிமாறன், விஜய்… இப்படி பெரிய இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்திருக்கிறது.
Iyshwarya Rajeshசினிமா பின்னணி கொண்ட உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் எளிதாக அமையவில்லையா?
எளிதாக அமையவில்லை. முதலில் சன் டிவி-யில் ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியின் 10 எபிசோட்களுக்கு ஆங்கர், பிறகு ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் அந்த சீஸன் டைட்டில் வின்னர். பிறகு, ‘குடும்பத்துக்காகச் சம்பாதிக்கணும்’ என்ற கட்டாயம் வரும்போது ‘நடிப்போம்’ என முடிவு செய்தேன். அப்படி ஒரு சீரியலில் நடித்தேன். நாளொன்றுக்கு 1,500 ரூபாய் சம்பளம். காலையில் இருந்து மாலை வரை காத்திருந்து நடித்து முடித்தால் வெறும் ஆயிரத்து ஐந்நூறுதானா? ஆனால் சிலருக்கு மட்டும் 5,000 ரூபாய், 10,000 ரூபாய் தந்தனர்.நாமளும் இரண்டு மூன்று படங்கள்ல நடிச்சிட்டுப் பிறகு சினிமாவுக்கு வருவோம்’ என்று நினைத்து வந்ததுதான் சினிமா.

-விளம்பரம்-

சினிமா வாய்ப்பாவது எளிதாக அமைந்ததா?
தினமமும் ஐந்தாறு தயாரிப்பு கம்பெனிகள் ஏறி இறங்குவேன்.தமிழ் பேசுறதாலயே நமக்கு வாய்ப்புக் கொடுக்கமாட்டேங்குறாங்களோ’ என்று நினைத்து, ‘நான் ஹைதராபாத்லயிருந்து வந்திருக்கேன். தெலுங்கு மட்டும்தான் பேசுவேன்’ என்று சொல்லிப் பேசும்போது இடையிடையே தமிழ் பேசி மாட்டிக்கொண்டு, ‘தமிழும் பேசுவேன் சார்’ என்று சமாளித்தது உண்டு.

- Advertisement -

வாய்ப்புத் தேடலின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதும் உண்டா?
நிறைய. ஓர் இயக்குநர், பாவம் அவரின் பெயரைச் சொல்ல வேண்டாம். இப்போது படம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். ‘இல்லமா, நீங்க காமெடியனுக்கு ஜோடியா நடி. நீயெல்லாம் தமிழ் இன்டஸ்ட்ரியில ஹீரோயினுக்கு செட்டாக மாட்ட’ என்று கொச்சைப்படுத்திப் பேசினார். ‘நீங்க ஹீரோயின் மெட்டீரியலே கிடையாதும்மா’ என்று சில தயாரிப்பாளர்கள் சொன்னார்கள்.
Iyshwarya Rajeshஆனால் என்னை அப்படி பேசிய இயக்குநரின் கையாலேயே நான் விருது வாங்கியிருக்கிறேன். உண்மையில் அவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அப்படி அவர்கள் பேசியதால்தான், வைராக்கியத்துடன் போராடி இன்று ஓரளவு நல்ல நிலைக்கு வந்திருக்கிறேன் என நினைக்கிறேன்.

காக்கா முட்டை’ அனுபவம் சொல்லுங்கள். எப்படி அமைந்தது அந்த வாய்ப்பு?
நான் இன்று வெவ்வேறு மொழிகளில் முக்கியமான படங்கள் பண்ணக் காரணம், ‘காக்கா முட்டை’யும் இதன் இயக்குநர் மணிகண்டன் சாரும்தான்.அவர் என்னைக் கூப்பிட்டு பேசினார். ‘இரண்டு குழந்தைகளுக்கு அம்மா’ என்று சொன்னதும் எல்லோரையும்போல நானும் பயந்தேன். ஏனென்றால் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘திருடன் போலீஸ்’ என்று நான் ஹீரோயினாக ஃபார்ம் ஆகிக்கொண்டு இருந்த நேரம். ‘அழுக்கும் சோகமும் அப்பிய முகத்துடன் சேரியில் இருக்கும் அம்மா கேரக்டர். லேசாக இடுப்பு தெரிந்தால்கூட அங்கும் கருப்பு அப்பி அழுக்காக்கியதை ஆடிஷனில் பார்த்துவிட்டு யோசிக்க ஆரம்பித்தேன்.
Iyshwarya Rajeshஅப்போது ‘பண்ணையாரும்…’ பட ஷூட்டிங் போய்க்கொண்டு இருந்தது. அந்த சமயத்தில்தான் மணி கதை சொன்னதால் ஷூட்டிங்கில் இருந்த விஜய்சேதுபதி, இயக்குநர் அருண் இருவரிடமும், ‘இப்படி காக்காமுட்டையில் அம்மாவா நடிக்க கூப்பிட்டு இருக்காங்க’ என்று சொன்னேன்.

-விளம்பரம்-

உடனே விஜய், ‘மணி செம டைரக்டர். நீங்க கத்துக்கலாம். யோசிக்காதீங்க. பண்ணுங்க. அவர் எந்த நடிகரையும் தப்பா கெயிட் பண்ணமாட்டார். செம சென்சிபுள் ஆள்’ என்றார். அந்த நம்பிக்கையில் பண்ணினேன். உண்மையிலேயே கற்றுக்கொண்டேன். அவர் நடித்துக்காட்ட மாட்டார். ‘100 சதவிகிதம் நடிச்சிருக்கீங்க. அவ்வளவு வேணாம். இயல்பா நார்மலா பண்ணுங்க போதும்’ என்று இன்புட் கொடுத்தபடி இருப்பார்.

அந்தப்படம் எனக்கு இன்னும் கற்றக்கொடுத்தபடி இருக்கிறது.

Advertisement