ஈஸ்வருடன் காரில் மஹாலக்ஷ்மி செய்த வேலை. கடுப்பான மனைவி ஜெயஸ்ரீ.

0
19639
eswar-maha
- Advertisement -

சன் ம்யூஸிக் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்த மஹாலக்ஷ்மிக்கும், தேவதையை கண்டேன் தொடரில் ஹீரோவாக நடித்த ஈஸ்வர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக ஈஸ்வரின் மனைவியும் நடிகையுமான ஜெயஸ்ரீ காவல் துறையில் புகார் அளித்திருந்தார். மேலும், விவாகரத்து கேட்டு தன்னை கொடுமை படுத்தியாக ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில் நடிகர் ஈஸ்வர் மற்றும் அவரது தாயார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மஹாலக்ஷ்மியா இப்படி எல்லாம் செய்துள்ளார் என்று ரசிகர்கள் புலம்பி தள்ளி வருகின்றனர்.

-விளம்பரம்-
iswar mahalakshmi க்கான பட முடிவு

- Advertisement -

சன் ம்யூஸிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த மஹாலக்ஷ்மி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசி’ சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர், மகாலட்சுமி. எட்டு வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்துவருபவர். இறுதியாக , சன் டிவியில் ‘தாமரை’ மற்றும் ‘வாணி ராணி’ சீரியலிலும், ஜீ தமிழ் சேனலில் ‘தேவதையைக் கண்டேன்’ சீரியலிலும் ஒரு வில்லி கதாபாத்திரத்தில் பரப்பாக நடித்து வந்தார்.

இதையும் பாருங்க : தென்னை மர கள்ளை கல்பாக அடிக்கும் அமலா பால். மொடா குடி போல.

மஹாலக்ஷ்மி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மஹாலக்ஷ்மிக்கும் தனது கணவருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்றும் இதனால் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜெயஸ்ரீ பேசும்போது, தேவதையை கண்டேன் சீரியலில் நடிக்க துவங்கிய பின்னர் இவருக்கும் மகாலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

-விளம்பரம்-
தொடர்புடைய படம்

அதன் பின்னர் அவருடன் வாழ ஆசைப்பட்டு என்னிடம் விவாகரத்து கேட்டார். ஆனால், நான் மறுத்து விட்டேன். அதனால் என்னை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். எனது பெண் முன்னாடியே மகாலட்சுமிக்கு வீடியோ கால் போட்டு கொஞ்சி கொஞ்சி பேசுவார். இவர்கள் இருவரின் விஷயம் குறித்து நான் மஹாலக்ஷ்மியிடம் பேச நினைத்து ஒரு நாள் அவருடைய ஷூட்டிங் சபாட்டிற்கு சென்றேன். பின்னர் அவருடைய காரில் இரண்டு மணி நேரம் பேசினோம். ஆனால், அவரோ அப்படி எல்லாம் கிடையாதுமா, எங்களுக்குள் எதுவும் கிடையாது என்று சொன்னால். நான் இதுகுறித்து உன்னிடம் பேசியதை ஈஸ்வரிடம் சொல்லாதே என்று சொல்லிவிட்டு வந்தேன்.

ஆனால், நான் மஹாலக்ஷ்மியுடன் பேசிய கனத்தில் இருந்து ஈஸ்வருடன் அவர் செல்போனில் தொடர்பில் இருந்துள்ளார். மேலும், நாங்கள் பேசியதை அனைத்தையும் ஈஸ்வர் கேட்டுள்ளார். பின்னர் நான் வீட்டிற்கு சென்றதும், நீ ஏன் மஹாலக்ஷ்மியுடன் போய் பேசினாய் என்று என்னை அடித்து துன்புறுத்தினர் என்று கூறியுள்ளார் ஜெயஸ்ரீ. இதுமட்டுமல்லாமல் மஹாலக்ஷ்மி மற்றும் ஈஸ்வர் குறித்த பல்வேறு ஆதாரங்களையும் வெளியிட்டுளளார் ஜெயஸ்ரீ. மகாலக்ஷ்மி வேறு ஒரு நபரின் மனைவியிடமே இப்படி ஒரு வேலையை பார்த்துள்ளது பலருக்கும் மிகவும் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement