தென்னை மர கள்ளை கல்பாக அடிக்கும் அமலா பால். மொடா குடி போல.

0
9383
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகை அமலா பால். சமீப காலமாகவே நடிகை அமலா பால் அவர்கள் சமூக வலைத்தளங்களின் “சர்ச்சை நாயகியாக” மாறி விட்டார். அதிலும் தற்போது அவர் இணையங்களில் வெளியிட்டு உள்ள புகைப்படம் குறித்து நெட்டிசன்கள் பல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை அமலா பால் அவர்கள் கேரளாவை சேர்ந்தவர். நடிகை அமலா பால் அவர்கள் 2009 ஆம் ஆண்டு ‘நீலதம்ரா’ என்ற மலையாள மொழி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் 2010 ஆம் ஆண்டு திரை உலகிற்கு வெளி வந்த “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இதனைத் தொடர்ந்து “மைனா” என்ற திரைப் படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முற்பொழுதும் உன் கற்பனை, தலைவா, ஆடை உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் அவர்களுக்கு ஜோடியாக நடிகை அமலா பால் அவர்கள் நடித்து உள்ளார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார். பிறகு தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். ஒரு ஆண்டு கூட பூர்த்தியாக முடிந்திருக்காது.

இதையும் பாருங்க : இயக்குனர் ஷங்கரின் மூன்று பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா. புகைப்படம் இதோ.

- Advertisement -

அதற்கு பிறகு நடிகை அமலா பால் அவர்களுக்கு சினிமாவில் பட வாய்ப்பு அதிகமாக கிடைக்கவில்லை. இதனால் அவர் கவர்ச்சியில் குதித்து விட்டார். மேலும், கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளி இட்டார். படங்கள் கிடைக்கும் என்று நினைத்து அவர் பல்வேறு போட்டோ சூட்களை நடத்தினார். பின்னர் இவர் “ஆடை” என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் குறித்து சமூக வலைத்தளங்களிலும், மக்களிடையேயும் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நடிகை அமலா பால் அவர்கள் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடித்து உள்ளார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது நடிகை அமலா பால் அவர்கள் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அது என்னவென்றால் ஒரு பானையில் நிறைய இருக்கும் தென்னை மர கள்ளை ஒரே மடக்கில் கடகடவென குடித்து இருக்கிறார் நடிகை அமலா பால். இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் எல்லாம் பயங்கர கடுப்பாகி மொடா குடி போல என்று இணைதளங்களில் நடிகை அமலா பாலை தாறுமாறாக வறுத்து எடுத்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement