சமீப காலமாக விஜய் படங்கள் என்றாலே பிரச்சனைகள் புக் செய்து வருகிறது. தலைவா படம் துவங்கி சமீபத்தில் வெளியான பிகில் படம் வரை பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தற்போது விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். சமீபத்தில் இந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது விஜய்யை படப்பிடிப்பிற்கே சென்ற வருமான வரித்துறையினர் விஜயை அழைத்து வந்தனர்.

விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரூ.300 கோடி லாபம் கிடைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னை தியாகராய நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏஜிஎஸ். நிறுவனம், நடிகா் விஜய்க்கு சொந்தமான பங்களாக்கள், பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமானவரித் துறையினா் திடீா் சோதனை செய்தனா். சோதனைக்கு பின்னர் விஜய் வருமான வரி துறை அலுவலகத்தில் நேரிலும் ஆஜராகி விளக்கமளித்தார்.

Advertisement

இதையும் பாருங்க : என் தாயை வேசி என்று திட்டினான் – விஷாலை வெளுத்து வாங்கிய மிஸ்கின். வீடியோ இதோ.

இந்த நிலையில் நேற்று (மார்ச் 12 ) விஜய் வீட்டில் 8 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தி யதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் தற்போது வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்துவந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது . தற்போது மாஸ்டர் படம் நெருங்கும் வெளியில் விஜய் வீட்டில் வருமான வரி துறை சோதனை நடத்தியுள்ளது.

Advertisement

சமீபத்தில் வந்த தகவலின் படி நேற்று வருமான வரி துறை அதிகாரிகளின் மூன்று கார்கள் மீண்டும் நடிகர் விஜய்யின் வீட்டை அடைந்தன. அவரது வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த தேடலைத் தொடர்ந்துள்ளனர். . மேலும் முன்பு நடந்த சோதனையின் போது முன்பு சீல் வைக்கப்பட்ட ஆவணங்கள் மீண்டும் சோதிக்கப்பட்டன. “வருமான வரி பிரச்சினை தொடர்பாக நடிகர் விஜய்யுக்கான விசாரணைநேற்றுடன் தேடலுடன் முடிவடைந்துள்ளது. கடந்த மாதத்தில் சீல் வைக்கப்பட்டிருந்த அறைகள் மற்றும் லாக்கர்களில் சோத்னை செய்யப்பட்டன, இப்போது முத்திரைகள் அகற்றப்பட்டுள்ளன என்று பிரபல செய்தி ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

அதே போல நடிகர் விஜய்யின் சம்பள விவரங்களையும் வருமான வரி அதிகாரிகள் வெளிப்படுத்தியும் உள்ளார்கள். நடிகர் விஜய்க்கு பிகில் படத்திற்கு ரூ .50 கோடியும் “பிகில்” 80 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் “விஜய் தனது வருமானத்திற்காக வரி செலுத்தியுள்ளார், 2015 ஆம் ஆண்டில் தனது” புலி “வெளியீட்டின் போது நடந்த வருமான வரி சோதனைக்கு பின்னர் நடிகர் விஜய் எந்தவிதமான வரி ஏய்ப்பிலும் ஈடுபடவில்லை என்று வருமான வரித்துறையே அறிவித்துலதாவும் செய்திகள் வெளியகியுள்ளது.

Advertisement