இந்த விஷால் நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த துப்பறிவாளன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனு இம்மானுவேல், வினய், பிரசன்னா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தொடர்ந்து ‘துப்பறிவாளன் 2’ படம் உருவாகி வருவதாக தகவல் சமீபத்தில் வெளிவந்தது. மேலும், இந்த படத்தை நடிகர் விஷாலே தயாரித்து, நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தை மிஸ்கின் இயக்கி வந்த நிலையில் அவர் திடீரென்று படத்தில் இருந்து விலகினார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. லண்டனில் 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக 40க்கும் மேற்பட்ட படக்குழுவினருடன் விஷால் லண்டனில் தங்கி இருந்தார். அங்கு படப்பிடிப்பை மிஷ்கின் சரியாக திட்டமிடாததால் அனுமதி பெறுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளதாக விஷால் தரப்பில் கூறப்பட்டது. பின் விஷாலுக்கும்,இயக்குனர் மிஸ்கினுக்கும் இடையே வாக்குவாதம் மோதல் உருவாகி உள்ளது. இதை அடுத்து நடிகர் விஷால் ஒரு வார படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னைக்கு திரும்பி விட்டார்.
இதையும் பாருங்க : நடிகரின் திருமணத்திற்கு சென்று விஜய் செய்துள்ள செயல் – திட்டியுள்ள விஜய்யின் மனைவி.
இதனால் மிஸ்கின் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். சமீபத்தில் இந்த படத்திற்காக மிஸ்கின் கேட்ட 15 கோரிக்கையின் கடிதம் ஒன்று இணையத்தில் லீக் ஆனது. இதை தொடர்ந்து நடிகர் விஷால், மிஸ்கின் இந்த படத்தில் இருந்து விலகிய காரணத்தையும், மிஸ்கினால் தனக்கு ஏற்பட்ட இழப்பையும் மன வருத்தத்தையும் தெரிவித்தோடு மிஷ்கினை கடுமையாக சாடி இருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மிஸ்கின், விஷாலை கடுமையாக திட்டி தீர்த்துள்ளார்.
அந்த பேட்டியில் பேசியுள்ள மிஸ்கின், துப்பறிவாளன் படத்தின் கிளைமாக்ஸ் சீன் போது நடைபெற்றுக்கொண்டிருந்தது அப்போது 3 துணை இயக்குனருடன் வெறும் ஆறு நாட்களில் தனியாக அந்த படத்தின் படப்பிடிப்பில் முடித்தேன் நான்கு நாட்கள் எடுக்க வேண்டிய சண்டைக்காட்சியை ஆறு மணி நேரத்தில் எடுத்து முடித்தோம் இறுதி நாளில் கையில் பணம் கூட இல்லை விஷாலுக்கு துப்பரிவாளன் படத்திற்கு முன்பாக மூன்று படங்கள் தோல்வியை சந்தித்தது ஆனால் துப்பறிவாளன் படம் வெற்றி பெற்றது இந்த படத்திற்கு எனக்கு வழங்கப்பட்ட சம்பளம் 3 கோடி ரூபாய் ஒன்றரை ஆண்டுகள் கழித்து என்னை மீண்டும் ஒரு கதை எழுத சொன்னான்.
உனக்கு நிறைய கடன் இருக்கிறது உனக்கு ஒரு நல்ல கதையை எழுதுவோம் இந்திய அளவில் பேசும் ஒரு வித்தியாசமான கதையாக இருக்கட்டும் அதனால் கோகினூர் வைரம் குறித்து எழுதுவோம் என்று கூறினேன் இந்த கதையை கேட்டு தயாரிப்பாளரும் அட்வான்ஸ் கொடுத்தார் கதையை கேட்டுவிட்டு என்னை கட்டிப்பிடித்து அழுதான் பாத்ரூம் சென்று அழுது விட்டு மீண்டும் கட்டிப்பிடித்து இந்த ஒரு கதை போதும் என்னுடைய அனைத்து கடன்களையும் அடைத்து விடுவேன் என்று கூறினான். மேலும், பேசிய மிஸ்கின் என்னுடைய தாயை வேசி என்று திட்டினான், அது என்னுடைய ரெக்கார்டு அவன் பேசியதுஎன்று கூறியுள்ளார் என்று வெளுத்து வாங்கியுள்ளார்.