ஐஸ்வர்யா இப்படி செய்ததால் தான் திருடினேன், போலீஸிடம் பகீர் தகவலை சொன்ன ஈஸ்வரி

0
654
Aishwarya
- Advertisement -

ரஜினிகாந்தின் மகள் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிட ஈஸ்வரி தற்போது போலீசில் வாக்குமூலம் கொடுத்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யாவின் லாக்கரில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைரம், நவரத்தின கற்கள், தங்க நகைகள் எல்லாம் காணாமல் போய் இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதில், 2019 ஆம் ஆண்டு தன்னுடைய தங்கை சௌந்தர்யா திருமணத்தில் நகையை போட்டிருந்தேன். அதற்கு பிறகு தனி லாக்கரில் அந்த நகைகளை வைத்தேன். அதை நான் திறந்து கூட பார்க்கவில்லை. ஆழ்வார்ப்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலை, சிஐடி நகர், போயஸ் கார்டன் என மூன்று வீடுகளில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டு இருந்தது. மேலும், நெக்லஸ்கள், ஆரம் வைர நகைகள் உள்ளிட்ட 3 கோடி ரூபாய் நகைகள் திருட்டுப் போய் இருக்கிறது.அப்போது ஐஸ்வர்யா வீட்டில் பணியாற்றி இருந்த ஈஸ்வரி என்பவர் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை நடந்திருப்பது போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது.

- Advertisement -

போலீஸ் விசாரணை :

இதனால் போலீஸ் மந்தவெளி பகுதியில் இருந்த ஈஸ்வரி மற்றும் அவருடைய கணவர் அங்கமுத்து இருவரை பிடித்து விசாரணை நடத்தி இருக்கிறது. விசாரணையில் அவர்கள் கூறியிருந்தது, ஐஸ்வர்யா வீட்டில் 18 ஆண்களுடன் நான் வேலை பார்த்து வந்தேன். நகை இருக்கும் லாக்கரின் சாவியை ஐஸ்வர்யா எங்கு வைப்பார் என்பது எனக்கு தெரியும். முதலில் கொஞ்சம் நகைகளை தான் லாக்கரில் இருந்து திருடினேன். இதை ஐஸ்வர்யா வீட்டில் யாருமே கவனிக்கவில்லை.

95லட்சத்தில் வீடு :

இதனை தொடர்ந்து கார் ஓட்டுனர் வெங்கடேசன் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக லாக்கரிலிருந்து நகைகளை எல்லாம் திருடினேன்.இது நான்கு ஆண்டுகளாக தொடர்ந்தது. இதற்கிடையில் வங்கியில் கடன் வாங்கி சோளிங்கநல்லூரில் 95 லட்சத்துக்கு வீடு வாங்கினேன். அந்த கடனை இரண்டு ஆண்டுகளிலேயே அடைத்து விட்டேன். பின் ஆறு மாதங்களுக்கு முன்பே நான் வேலையை விட்டு நின்று விட்டேன் என்றும் ஐஸ்வர்யாதான் தன்னை திருட தூண்டியதாகவும் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார் ஈஸ்வரி.

-விளம்பரம்-

30ஆயிரம் சம்பளம் :

மேலும் ஈஸ்வரியை போலீசார் பல கோணங்களில் விசாரித்ததில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தான் மாடு போன்று உழைத்தாகவும் ஆனால் அவர் போதிய சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். போலீஸ் எவ்வளவு சம்பளம் ஐஸ்வர்யா கொடுத்தார்கள் என்று கேட்கையில் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் ஆனால் அந்த சம்பளம் போதுமானதாக இல்லாததினால் சிறிய சிறிய திருட்டுகளை ஐஸ்வர்யாவில் வீட்டில் செய்து வந்ததாக ஈஸ்வரி கூறினார்.

திருடியதற்கு கரணம் :

அதோடு இந்த திருட்டுகளை ஐஸ்வர்யா மற்றும் அவரது குடுமபம் கண்டுபிடிக்காத காரணத்தினால் நகைகளை திருட ஆரம்பித்து அந்த நகைகள் மூலம் வீடு கட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் கொஞ்சம் நாள் வீட்டில் இருந்திருந்தால் கண்டிப்பாக அதிகம் திருடியிருப்பேன் என்றும், ஐஸ்வர்யா குறைவான சம்பளம் கொடுத்தே நான் அவரின் வீட்டில் திருட என்னை தூண்டியது என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement