புதிய முயற்சியால் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு. மீண்டு வரும் இத்தாலி.

0
4502
- Advertisement -

ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வைத்து இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது இந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
குயூபா மருத்துவர்கள்

இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனாவினால் அதிகம் பாதிப்படைந்து உள்ளது இத்தாலி நாடு தான். ஒரே மாதத்தில் 6 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இத்தாலி மருத்துவர்களுக்கு உதவி புரியும் வகையில் கியூபா மருத்துவர்களும் இத்தாலி சென்று உள்ளனர். கொரோனாவினால் பாதித்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் இத்தாலியில் படிப்படியாக இறப்பு விகிதம் குறைய தொடங்கியுள்ளது. 21ஆம் தேதி 793 பேர் பலியாகினர். 22ஆம் தேதி 651 பேர், 23 ஆம் தேதி 601 என்று படிப்படியாக இறப்பு விகிதம் குறைய தொடங்கியுள்ளது. அதேபோல் கொரோனா பரவும் வேகமும் குறைய தொடங்கியுள்ளது. 5000 பேருக்கு இருந்த தொற்று தற்போது 4000 என்ற அளவில் குறைந்துள்ளது.

Image result for paolo maldini
கொரோனா பாதிப்புக்குள்ளான இத்தாலி கால்பந்தாட்ட வீர பாலோ மால்டினி

தற்போது வரை இத்தாலியில் 50 ஆயிரத்து 138 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் பேஷன் நகரமாகக் கருதப்படும் லேம்பர்டி மாகாணத் தலைநகரான மிலன் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலி மற்றும் ஏ.சி.மிலன் அணியின் முன்னாள் கேப்டன் முன்னாள் கேப்டன் பாலோ மால்டினி அவரின் மகன் டேனியல் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

இவர்கள் இருவரையும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். படிப்படியாக கொரோனாவின் இறப்பு விகிதம் குறைந்து வருவதால் இத்தாலி மருத்துவத்துறை சற்று ஊக்கம் அடைந்துள்ளது. இத்தாலி நாடு முற்றிலும் முடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டுக்கு உள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியே வந்தால் உடனடியாக கைது செய்யப்படும் என்று அறிவித்து உள்ளார்கள்.

Image result for corona Italy

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். இந்தியாவில் இதுவரை 5 பேர் இறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement