தமிழ் திரையுலகில் காமெடியில் தனி முத்திரை பதித்த காமெடி கிங் வடிவேலு. இவரது நகைச்சுவையும் டைமிங் காமெடியும் மிகப்பிரபலம். தற்போதைய காலகட்டத்தில் சமூகவலைத்தளங்களில் இவரது மீம்ஸ் இல்லாத நாட்களே இல்லை எனலாம்.

Advertisement

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தன்னுடைய திறமையின் மூலமாக கதாநாயகனாக உயர்ந்தவர். 23ம் புலிகேசி மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய வடிவேலு தொடர்ந்து ஹீரோவாக மேலும் சில படங்களில் நடித்துவருகின்றார்.

இந்நிலையில் வடிவேலு நடித்த “சிவலிங்கா” படத்தில் ரித்திகாசிங் நடிகையாக நடித்திருந்தார். அப்போது சூட்டிங்கின் போது வடிவேலுவை ரித்திகாசிங் அடிப்பதுபோல ஒருகாட்சி இருந்ததாம்.

Advertisement

Advertisement

அந்த காட்சி படமாக்கப்பட்ட போது மொழி பிரச்சனையில் உண்மையிலேயே குத்துச்சண்டை விரரான ரித்திகாசிங் வேகமாக வடிவேலுவை ஓங்கி ஒரு குத்துவிட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத வடிவேலு நிலைகுலைந்து வலியால் அடுத்த 5 நாட்கள் வலியால் துடித்து போனதாக அவரே ஒரு பேட்டியில் சொல்லி புலம்பியுள்ளார்.

Advertisement