ப்ருஸ்லீகாக பொய்யாக நடித்தேன்.! பல வருட ரகசியத்தை உடைத்த ஜாக்கி சான்.!

0
2810
bruce-lee
- Advertisement -

உலகில் உள்ள பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் , அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குனர், தற்காப்பு கலைகளை பயிற்று விற்பவர் என பல துறைகளில் சிறந்து விளங்கியவர் தான் “புரூஸ்லீ”. இவர் முதலில் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதற்குப்பிறகு தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்கி ஹாங்காங் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் தற்காப்பு கலையை மையமாக கொண்டு நடித்து வந்தார். இதனால்,உலகமெங்கும் புரூஸ்லீக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து கொண்டு வருகிறது . மேலும் புரூஸ்லீயின் நடிப்பில் வெளிவந்த ‘ என்டர் தி டிராகன்’ படத்தின் ஒரு காட்சியில் உலக புகழ்பெற்ற பிரபல நடிகர் ‘ஜாக்கி ஜான்’ அவர்கள் புரூஸ்லீடம் அடிவாங்கி வலிப்பது போல நடித்துள்ளார். தற்போது அந்தப் படத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக வந்துள்ளது.

-விளம்பரம்-
Related image

மேலும்,1973ஆம் ஆண்டு புரூஸ் லீ நடித்து வெளியாகி வெற்றிகரமாக திரையுலகில் ஒடி உலகெங்கும் பாராட்டு மழையை குவித்த படம் தான் “என்டர் தி டிராகன்”.இந்த படத்தில் ஜாக்கி ஜான் அவர்கள் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். அது புரூஸ் லீ ஒரு அடியால் கும்பல்களை தாக்கி இருப்பது போன்ற காட்சி. அந்த அடியார்களில் ஒருவராக ஜாக்கி ஜான் நடித்துள்ளார். மேலும், புரூஸ்லியிடம் அடிவாங்குவது போல் நடித்த அனுபவத்தை பற்றி ஜாக்கிஜான் கூறிய வீடியோ ஒன்றை புரூஸ்லீயின் மகன் ஷனோன் லீ தனது தந்தை புரூஸ்லி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அது தற்போது உலகமெங்கும் பிரபலமாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜாக்கி ஜான் அவர்கள் கூறியது, நான் ‘என்டர் தி டிராகன்’ படத்தில் புரூஸ் லீ உடன் ஒரு காட்சியில் நடித்து வந்தேன்.

- Advertisement -

அந்த காட்சியில் நான் புரூஸ்லி இடம் அடி வாங்குவது போல் சீன் . எனக்கு பின்னால் கேமராவும், முன்னால் புரூஸ்லியும் இருந்தார். நான் ஆச்சர்யத்திலும் வியப்பிலும் இருந்தேன். மேலும் ,அவரை நோக்கி நான் ஓடும்போது திடீரென்று என் கண்கள் இருட்டின. அது வரைக்கும் என்ன நடந்தது? என்று எனக்கு தெரியவில்லை. திடீரென்று பார்த்தால் அவர் குச்சியை வைத்து என்னை அடித்ததை உணர்ந்தேன். இதனால் எனக்கு மயக்கமும் ஏற்பட்டது. அப்போது நான் புரூஸ்லீயை பார்க்கும்போது அவர் இயக்குனர் கட் சொல்லும் வரை நடித்துக் கொண்டே இருந்தார். பின் அவர் கையில் இருந்த குச்சியை தூக்கிப் போட்டுவிட்டு என்னை நோக்கி ஓடிவந்து என்னை பிடித்தார்.

Image result for bruce lee jackie chan

மேலும்,அவர் என்னை பார்த்து’ மன்னித்துவிடு’ என்று கூறினார். எனக்கு வலி போய்விட்டது. ஆனால் அவர் என்னை அணைத்து கொண்டு இருந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால், நான் வலிப்பது போல நடித்து இருந்தேன். அன்று முழுவதும் அப்படியே செய்துகொண்டு இருந்தேன் என்று மகிழ்வுடன் கூறினார். ஆனால் ‘என்டர் தி டிராகன்’ படம் வெளிவருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே புரூஸ் லீ அவர்கள் இறந்துவிட்டார் என்று தகவல் ரசிகர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. புரூஸ் லீ ஒரு மிகப் பெரிய பலசாலி, திறமைசாலி என்பதில் ஐயமில்லை என்று தங்கள் கருத்துக்களை உலகெங்கும் உள்ள ரசிகர்கள் பதிவிட்டு வந்தார்கள்.

-விளம்பரம்-
Advertisement