விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லினின் லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் ஆண் தொகுப்பாளர்களுக்கு நிகராக பெண் தொகுப்பாளினிகளும் மக்கள் மத்தியில் பிரபலம் தான். டிடி துவங்கி பிரியங்கா வரை விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளாக இருக்கிறார்கள். அந்த நிலையில் விஜய் டிவி இளம் தொகுப்பாளினியாக களமிறங்கி இளசுகள் மனதில் இடம்பிடித்தவர் ஜாக்லின்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்பபோவது யாரு’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
ஜாக்லின் குறித்த தகவல்:
மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கானா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். அதற்கு பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார்.
ஜாக்லின் நடித்த சீரியல்:
இருந்தாலும், இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் மீண்டும் சின்னத்திரைக்கு வந்து விட்டார். அதன் பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ‘தேன்மொழி’ சீரியலில் நடித்து இருந்தார். இந்த சீரியலும் எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை என்பதால் சீரியலை திடீரென்று நிறுத்தினர். அதன் பின்னர் தொகுப்பாளினியாக தொடர்ந்து வந்தார் ஜாக்லின். ஆனால் சமீப காலமாக இவரை எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் காண முடியவில்லை.
ஜாக்லின் வீடியோ:
இப்படி இருக்கும் நிலையில் தற்போது ஜாக்லின் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் சர்ச்சை ஆகி இருக்கிறது. அதாவது, ஜாக்லின் சாப்பாடு ஆர்டர் செய்திருக்கிறார். அதில் சொமேட்டோ, swiggyல் எது முதலில் வருகிறதோ அவர்களுக்கு ₹500 பரிசு தர இருப்பதாக கூறியிருக்கிறார். அதன்படி சோமாட்டோ முதலில் வந்திருக்கிறது. அந்த நபரிடம் சென்று, நீங்கள் தான் முதலில் வந்தீர்கள். உங்களுக்கான ₹500 என்று கொடுத்திருக்கிறார் ஜாக்லின்.
இதுங்களோட விளம்பர வெறிக்கு அப்பாவிங்க ரெண்டு பேர use பண்ண பார்த்துச்சு. ஆனா… அந்த zomato ஆளு ஹெல்மெட்ட கூட எடுக்காம இதை செருப்பால அடிச்சிவிட்டுட்டு போயிட்டாரு..👌 pic.twitter.com/xmOWKhd29I
— Dr. தண்டச் சோறு (@siya_twits) June 29, 2024
நெட்டிசன்கள் விமர்சனம்:
அதற்கு அந்த நபர், எனக்கு வேண்டாம். நான் அருகில் இருந்ததால் வந்தேன். அவர் தான் தூரத்தில் இருந்து வந்துருக்கலாம். அதனால், அவருக்கு கொடுங்கள் என்று சொல்கிறார். இருந்தும் ஜாக்லின், பரவாயில்லை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கும் தருகிறேன் என்று சொல்ல, அவர் எனக்கு வேணாம் நீங்கள் அவருக்கே கொடுங்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் ஜாக்குலினை விமர்சித்து திட்டி வருகிறார்கள்.