தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஜெய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் தான் பேபி அண்ட் பேபி. இந்த படத்தை இயக்குனர் பிரதாப் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு, சத்யராஜ், பிரக்யா, சாய் தன்யா, ரெடின் கிங்க்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், இளவரசு, சிங்கம்புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, விஜய் டிவி ராமர், விஜய் டிவி தங்கதுரை, சேசு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை யுவராஜ் என்பவர் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு சாரதி என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இன்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் சத்யராஜ் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய மகன் தான் ஜெய். இவர் தன்னுடைய கிராமத்தை சேர்ந்த பிரக்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், தன்னுடைய தந்தைக்கு பயந்து ஜெய் தன்னுடைய மனைவியுடன் வெளிநாட்டிற்கு சென்று விடுகிறார். இதனால் ஜெய் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார் சத்யராஜ். அதோடு ஜமீனுக்கு ஆண் வாரிசு இல்லையே என்ற கவலையிலும் சத்யராஜ் இருக்கிறார்.
இந்த சமயத்தில் தான் ஜெய்க்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த தகவல் அறிந்த சத்யராஜ், ஜெயின் மீது இருந்த கோபத்தை விட்டு விடுகிறார். பின் அவர், ஜெய்யை உடனடியாக திரும்பி வர சொல்கிறார். இதனால் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல ஜெய், பிரக்யா மற்றும் இவர்களுடைய குழந்தையும் விமான நிலையம் வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஜாதகம் சாஸ்திரம் என்று ஊறிப் போய் இருப்பவர் தான் இளவரசு. இவருக்கு மகனாக யோகி பாபு இருக்கிறார்.

ஜாதகத்தில் வெளிநாட்டு சென்று வேலை பார்க்க வேண்டும் என்று சொன்னதால் யோகி பாபு வெளிநாட்டிற்கு போகிறார். வெளிநாட்டில் சாய் தன்யா என்பவரை யோகிபாபு திருமணம் செய்கிறார். திருமணம் செய்த விஷயத்தை கேள்விப்பட்டு இளவரசன் கோபப்படுகிறார். அது மட்டும் இல்லாமல் தங்களுடைய ஜாதகப்படி வீட்டிற்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் மட்டுமே குடும்பம் செழிக்கும் என்று சொல்கிறார்கள். அதற்கு ஏற்ப யோகி பாபுவிற்கும் பெண் குழந்தை பிறக்கிறது.
இதனால் யோகி பாபு ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் யோகி பாபுமே தன்னுடைய மனைவி குழந்தையுடன் விமான நிலையத்திற்கு வருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஜெய் மற்றும் யோகி பாபு குழந்தைகள் மாறிவிடுகிறது. விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது குழந்தை மாறிவிட்டதால் இரண்டு குடும்பமே கதறி அழுகிறது. அதற்கு பின் என்ன நடந்தது? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
படத்தின் ஹீரோ ஜெய் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

மற்ற படங்களை விட இந்த படத்தில் இவர் கொஞ்சம் வித்தியாசமாக நடித்து இருக்கிறார். சண்டை, எமோஷனல் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. இவர்களை அடுத்து படத்தில் கதாநாயகிகளாக வரும் பிரக்யா, சாய் தன்யா இருவருமே தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். சத்யராஜ் தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். அதேபோல் இளவரசும் தனக்கு கொடுத்த வேலையை கன கச்சிதமாக செய்திருக்கிறார்.

இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே நன்றாக இருக்கிறது. ஆனால், சில இடங்களில் காமெடியில் இயக்குனர் திணறி இருக்கிறார். காமெடியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். யோகி பாபு காமெடி நன்றாக இருக்கிறது. காமெடியை மையமாக வைத்து தான் இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார். ஆனால், அதில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருந்தால் சூப்பராக இருக்கும். பின்னணி இசை, ஒளிப்பதிவு ஓகே. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக பேபி & பேபி இருக்கிறது.
நிறை:
இது காமெடி படம்
நடிகர்கள் தங்களுடைய வேலையை நன்றாக செய்திருக்கிறார்கள்.
பின்னணி இசை ஒளிப்பதிவு ஓகே
கதை சலிப்பில்லாமல் நகர்கிறது.

குறை:
இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில்கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்
காமெடியிலும் மெனக்கட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
யோகி பாபு-ஜெய் இன்னும் கூடுதலாக உழைத்திருக்கலாம்
மொத்தத்தில் பேபி & பேபி – முயற்சி