படத்தில் நடித்ததால் டிசி வழங்கப்பட்டதா? ஜெய் பீம் படத்தில் நடித்த அல்லியின் பெற்றோர்கள் விளக்கம்.

0
758
jaibhim
- Advertisement -

அனைத்து சோசியல் மீடியாவிலும் பேசும் பொருளாக ஜெய் பீம் படம் அமைந்து உள்ளது. சூர்யா அவர்கள் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது . இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம்.

-விளம்பரம்-
jai

மேலும், பழங்குடியினர் பெண்ணுக்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் பார்த்து பல பிரபலங்கள் இந்த படம் குறித்து சோசியல் மீடியாவில் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர். இதனிடையே இந்த படத்தில் இந்த படத்தில் ராஜகண்ணு– செங்கேணி மகளாக அல்லி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறுமி நடித்திருந்தார்.

- Advertisement -

அதோடு ஜெய் பீம் படத்தில் சூர்யா கால் மேல் கால் போட்டு செய்தித்தாள் படிப்பார். அதை பார்த்து சிறுமி அதே போல் கால் மேல் கால் போட்டு செய்தித்தாள் படிப்பார். அந்த காட்சியின் மூலம் அந்த சிறுமி பிரபலமானார் என்றே சொல்லலாம். மேலும், இந்த படத்தில் சிறுமி நடித்ததற்காக பள்ளி நிர்வாகம் சிறுமிக்கு டிசி கொடுத்து விட்டதாக சொல்லி சோஷியல் மீடியாவில் பல்வேறு செய்திகள் எழுந்து இருந்தது. இந்த நிலையில் இது குறித்த சிறுமியின் பெற்றோர்கள் தற்போது விளக்கம் அளித்துள்ளார்கள்.

அதில் அவர்கள் கூறியிருப்பது, இந்த படத்தில் நடித்ததற்காக என் மகளுக்கு பள்ளி நிர்வாகம் டிசி வாங்க சொல்லி வற்புறுத்தியதாக வெளிவந்த தகவல் எல்லாமே பொய். இதெல்லாம் உண்மை கிடையாது. பள்ளி நிர்வாகம் எங்களுடைய குழந்தைக்கு ஆதரவாகத் தான் இருக்கிறார்கள். ஜெய்பீம் படத்தில் நடித்த பிறகு எங்களுடைய மகளுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றது என்று கூறி உள்ளார்கள். இப்படி அந்த சிறுமியின் பெற்றோர் கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement